Home India உயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு

உயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு

SHARE


வீடியோ காலில் நண்பனிடம் தற்கொலை செய்வது போன்று பிராங்க் செய்த வாலிபர் உண்மையிலேயே கழுத்தில் புடவை இருக்கி பலியாகியுள்ள சம்பவம் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே திருச்சனூர் என்ற பகுதியில் நடைபெற்றுள்ளது.

255 வயது சிவகுமார் என்ற வாலிபர் கடந்த ஞாயிறு அன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இரவு நேரத்தில் தனது நண்பருக்கு செல்போன் மூலம் வீடியோ கால் செய்துள்ளார்.

நான் தற்கொலை செய்யப் போகின்றேன் என வீடியோ காலில் லய்வாக காட்டி நண்பரிடம் பிராங்க் செய்துள்ளார். ஒரு புடவையை எடுத்து ஒரு புறத்தை தனது கழுத்திலும் மறு புறத்தை சீலிங்க ஃபேனிலும் கட்டிக் கொண்டு கட்டில் மேல் நின்றவாறு நான் தற்கொலை செய்யப் போறேன் என நண்பரிடம் கூறியுள்ளார்.

சிவகுமார் நல்ல போதையில் இருப்பதை அறிந்து உடனே நண்பர் வீட்டில் உள்ளவர்களுக்கும் காவல்துறைக்கும் போன் செய்துள்ளார். அவரை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். நண்பனை நம்ப வைக்க தனது காலை கட்டிலில் இருந்து சிவகுமார் எடுக்க புடவை சிவகுமாரின் கழுத்தை இருக்கியது.

எழுதில் பேலன்ஸ் செய்து கட்டிலின் மீது மீண்டும் காலை வைத்து விடலாம் என்ற நிலை இருந்த போதும் சிவகுமார் ஃபுல் குடிபோதையில் இருந்ததால் அவரது கையும் காலும் பேலன்ஸ் செய்யும் சக்தியை இழந்து இருந்தது. போதையில் அவரால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை.

நண்பர் லய்வில் பார்த்துக் கொண்டிருக்க ஒரு சில நிமிடங்களில் சிவகுமாரின் உயிர் பிரிந்தது. இது அனைத்தும் வீடியோ காலில் பதிவாகி அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பின்னர் வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்த அவரை தூக்கி பார்த்த போது அவருக்கு உயிர் இல்லை.

குடிபோதையில் விபரீத விளையாட்டு ஒருவரின் உயிரை பறித்துள்ளது. போதையில் இல்லாமல் இருந்திருந்தால் சிவகுமார் எளிதில் தப்பித்திருக்கலாம். நாசகார மது பழக்கம் தன் உயிருக்கே உளை வைக்க போகின்றது என்பதை தெரியாமல் கடந்த 3 வருடமாக குடி பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார் திருமணம் ஆகாத வாலிபர் சிவகுமார்.

டிக்டாக்கிலும் சாகசம் செய்வதாக பலரின் உயிர் பறிபோயுள்ளதை நாம் பார்த்திருக்கின்றோம். நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நவீன தொழில் நுட்பங்களை நல்லதிற்கு பயன்படுத்தின்றார்களோ இல்லையே அதனை தவறாக பயன்படுத்தி கடைசியில் உயிரையே விடும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இந்த சம்பவம் டிக்டாக்கில் நடைபெறாவிட்டாலும் இது போன்ற நவீன தொழில் நுட்பங்கள் நாம் உயிர் வாழ உதவியாக இருக்க வேண்டுமே தவிர நம் உயிரை பறிக்க உதவியாகிவிடக் கூடாது.

குடி பழக்கம் ஒரு மனிதனின் மதியை எப்படி மழுங்க செய்கின்றது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here