Home India நடுரோட்டில் உருண்ட வந்த வாலிபரின் தலை காட்டாங்கொளத்தூர் பேருந்து நிலையத்தில் நின்ற பொதுமக்கள் அதிர்ச்சி

நடுரோட்டில் உருண்ட வந்த வாலிபரின் தலை காட்டாங்கொளத்தூர் பேருந்து நிலையத்தில் நின்ற பொதுமக்கள் அதிர்ச்சி

SHARE

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பேருந்து நிலையத்தில் மனித தலை ஒன்று இன்று பட்டப்பகலில் நடுரோட்டில் உருண்டு ஓடியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பைக்கில் வந்த இருவர் தங்களிடமிருந்த ப்ளாஸ்டிக் பை ஒன்றை குப்பை தொட்டில் வீசி விட்டு சென்றுள்ளனர். ஏதோ குப்பையை கொட்டி விட்டு செல்கின்றார்கள் என நினைத்த மக்கள் அதிலிருந்து மனித தலை ஒன்று உருண்டு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலிசார் தலையை கை பற்றினர். பின்னர் இந்த தலையின் உடல் கூடுவாஞ்சேரியின் ஒரு காட்டு பகுதியில் உள்ளது என்ற தகவல் கிடைத்ததை அடுத்து போலிசார் அங்கு சென்று பார்த்ததில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த பேருந்த நிலையத்தில் கிடந்த தலையின் உடல் கிடந்துள்ளது.

முதற்கட்ட விசாரனையில் கொலை செய்யப்பட்ட நபர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த பலாஜி (35) என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக பிரமுகர் ஒருவரின் கொலை வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக கைதும் செய்யப்பட்டுள்ளார். ஜாமினில் வெளிவந்த நிலையில் பாலாஜி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்தது யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து மறைமலைநகர் போலிசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் ஒரு தலை நடு ரோட்டில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தலை வீசப்பட்ட இடத்தில் தான் காஞ்சிபுரம் பேருராட்சி அலுவகமும் உள்ளது குறிப்பிடதக்கது.

தாங்கள் செய்த கொலை குறித்து ரவுடிகள் கெத்து காட்டுவதற்காக தலையை மட்டும் நடுரோட்டில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கண்களுக்கு படும் வண்ணம் வீசி சென்றுள்ளனர்.

கொலை கொள்ளைகளை அச்சத்தில் மறைமுகமாக செய்த குற்றவாளிகள் தற்போது அனைவருக்கு அறிவித்து விட்டு செய்யும் துணிச்சல் எப்படி அவர்களுக்கு வந்தது என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. நேற்று ஒரு நாளில் பட்டப்பகயில் இரண்டு பெண்களிடம் செயின் பறிப்பு இன்று நடுரோட்டில் தலையை உருட்டி விட்டு விளையாடியுள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here