Home Tamil Nadu சினிமா பாணியில் பஞ்ச் டயலாக் பேசி மதுரை சிறைதுறை எஸ்பியை மிரட்டும் ரவுடி புல்லட் நாகராஜ்

சினிமா பாணியில் பஞ்ச் டயலாக் பேசி மதுரை சிறைதுறை எஸ்பியை மிரட்டும் ரவுடி புல்லட் நாகராஜ்

SHARE

சினிமா பாணியில் மதுரை சிறை துறை பெண் எஸ்பியை ரவுடி மிரட்டும் ஆடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. ”என்னைய பாத்தா உங்க அதிகாரிங்க உச்சா போவாங்க நான் சிறையிலயே கஞ்சா வித்தவன் ஊசி (போதை ஊசி) போட்டவன் உனக்கு தைரியம் இருந்தா இந்த ஆடியோவ ரெகார்ட் பன்னி எம்மேல ஆக்சன் எடு பாக்கலாம்” என ஆடியோவில் மிரட்டும் ரவுடியின் பெயர் புல்லட் நாகராஜ்.

இவன் தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்து ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்தவன். இவன் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட வழக்குள் உள்ளது. இவனது சகோதரனும் ஒரு ரவுடி. புல்லட் ராஜாவின் சகோதரன் கொலை வழக்கில் மதுரை ஜெயிலில் இருந்த போது தான் தடையின்றி போதை ஊசி போட்டுக் கொள்ள சிறை துறை டாக்டர் அனுமதி மறுத்தததால் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் அண்ணன் ஆத்திரமடைய அதை பார்த்த தம்பி ரவுடி கோபம் அடைய ஆத்திரத்தில் தம்பி ரவுடி புல்லட் நாகராஜ் அந்த சிறை துறை அதிகாரி எஸ்பி ஊர்மிலா அவர்களை மிரட்டி இந்த வாட்சப் ஆடியோவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சினிமா படத்தில் வில்லனின் டயலாக் தான் போலருக்கு என நினைக்கும் அளவிற்கு அமைந்துள்ளது ரவுடியின் மிரட்டல் பேச்சுகள்.

அந்த டாக்டரம்மா வெளிய வரும் போது லாரி ஏத்திர போது பாத்து நடந்துக்க சொல்லுங்க… எத்தனையோ பேத்த அடிச்சு கொன்றுக்கோம் நானே ஒரு அதிகாரி மேல டாக்கிசிய ஏத்திருக்கேன் நீ என்ன பச்சா நான் பாக்காத ஜெயிலா நான் பாக்காத அதிகாரியா முடிஞ்சா இந்த ஆடியோவ ரிகார்ட் பன்னி ஆக்சன் எடு பாக்கலாம் நீ ஆக்சன் எடுத்தன்னா நான் செத்துருவேன் (வடிவேலு காமடியில் இந்த நாய் சேகரு செத்துருவான் என்ற வருவது போன்று) ஆறுலயும் சாவு நூறுலயும் சாவு அத பத்தி இந்த புல்லட் ராஜா கவலப்படமாட்டான் என துணி்ச்சலா மிரட்டுகின்றான் அந்த ரவுடி.

சினிமா படத்தில் வருவது போன்று மேம்.. உங்களுக்கு ஒரு வாய்ப்பு தர்றேன் என ரஜினியின் வசம் போன்று பேசுகின்றான் அந்த ரவுடி.

நீங்க எல்லாம் ஜெயில் கேட்ட விட்டு வெளிய வந்து தான் ஆகனும், ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது நல்லா கேட்டுக்கோங்க.. நான் ஒன்னும் செய்ய மாட்டேன் பசங்க எதாவது செய்துருவாங்க ஒரு ஜெயிலர உயிரோட எரிச்சு புட்டானுங்க… என அந்த ரவுடி தொடர்ச்சியாக மிரட்டுகின்றான்.

ஆங்கிலத்தில் தத்துவம் தமிழ் பழமொழி என பேசும் இவன் படித்த ரவுடியாக இருப்பான் போல் இவன்.

அந்த ஆடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்பி ஊர்மிலா அவர்கள் இவன் மிரட்டளுக்கெல்லாம் பயப்பட்ர ஆளு நாங்க இல்ல தைரியும் இருந்தா நேர்ல வர சொல்லுங்க என கூலாக பதில் அளித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here