Home Tamil Nadu பிறந்த 4 நாளே ஆன குழந்தையை சுடுகாடு பகுதியில் வீசி செல்லும் கொடூர பெண் ,...

பிறந்த 4 நாளே ஆன குழந்தையை சுடுகாடு பகுதியில் வீசி செல்லும் கொடூர பெண் , சிசிடிவியில் பதிவான வீடியோ

SHARE

சமீபத்தில் சுதந்திர தினத்தன்று தொப்புல் கொடி கூட நீக்கப்படாத நிலையில் பிறந்த பச்சிளம் குழந்தை குடிநீர் கால்வாயில் வீசப்பட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குழுந்தை உயிருடன் காப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து சிறிது நாட்களில் ஆர்கே நகர் பகுதியில் பிறந்த குழந்தை தூக்கி வீசப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவங்களில் குழந்தையை யார் வீசி சென்றது என இதுவரை தெரியவில்லை. போலிசார் விசாரனை மேற் கொண்டு வரும் நிலையில் , சென்னை காரம்பாக்கத்தில் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ட்ராவல் பேக்கில் ஒரு பெண் வீசி செல்லும் இரக்கமற்ற செயலின் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

நேற்று இரவு சென்னை போரூர் அடுத்து உள்ள காரம்பாக்கம் சுடுகாடு பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் குழந்தையின் அழு குரல் கேட்டு அந்த பகுதியில் இருந்த ஓட்டுனர் ரவி என்பவர் அந்த குழந்யை மீட்டு காவல் துறையில் ஒப்படைத்துள்ளார். காவல்துறை குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கம் போலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்த நிலையில், அந்த குழந்தையை பெண் ஒருவர் வீசி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது போலிசாருக்கு கிடைத்துள்ளது.

இதை வைத்து அந்த பெண் யார் , அவர் குழந்தையின் தாயா அல்லது உறவினரா ? அல்லது வேறு ஏதுமா ? குழந்தை யாருடையது ? குழந்தையின் தந்தை யார் என்பது உள்ளிட்ட விபரங்களை போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

குழந்தை இல்லை என்பதால் பலர் கேள்வி படும் மருத்துவமனைகளுக்கெல்லாம் ஏறி இறங்குவது ஒரு புறமிருக்க பெற்ற குழந்தையை இரக்கமற்று இது போன்று வீசி செல்லும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது.

இது போன்ற சம்பவங்கள் தற்போது தமிழகத்தில் அதிகரிப்பது சமூதாயத்தில் ஏற்பட்டுள்ள ஒழுக்க சீர்கேட்டின் அறிகுறியாக என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பெண்ணும் பெண்ணும் சேரலாம் ஆணும் ஆணும் சேரலாம், திருமணத்திற்கு பிறகும் விரும்பியவருடன் பெண் தொடர்பு வைக்கலாம் என்ற தீர்ப்புகள், மியுசிகல்லி அந்த கல்லி என அபிராமிகளை வளர்த்து விடும் ஆப்புகள் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகின்றதா ? என்ற கேள்விக்கு பதில் யாரிடம் உள்ளது ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here