Home India நாட்டின் தலைநகர் டெல்லியில் மகன் கண்முன்னே நடந்த துணிகரம் – சிசிடிவி வீடியோ

நாட்டின் தலைநகர் டெல்லியில் மகன் கண்முன்னே நடந்த துணிகரம் – சிசிடிவி வீடியோ

SHARE

நாட்டின் தலைநகர் நகர் டெல்லியில் சாலையில் தனது மகனுடன் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் சர்வசாதாரணமாக செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

டெல்லி தயால்புர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சாலையில் தனது மகனுடன் பெண் ஒருவர் இரவு நேரத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே பைக்கில் இருவர் வந்துள்ளனர். பெண்ணை நெருங்கியதும் வாகனத்தை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி செயினை கேட்க அந்த பெண்ணும் வெறு வழியின்றி எதிர்ப்பு காட்டாமல் செயினை கொடுத்து விடுகின்றார். அருகில் இருந்த சிறுவன் இதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றான்.

பெண் செயினை கொடுத்ததும் கொள்ளையர்கள் செல்வது போன்று சென்று மீண்டும் வந்த அந்த பெண்ணிடம் வந்து கத்தியை காட்டி இன்னும் ஏதாவது வைச்சுருந்தா எடு என மிரட்டுகின்றனர்.

தன்னிடம் இருந்தவற்றை எடுத்துக் கொடுத்து விட்டு தப்பித்தால் போதும் என அந்த பெண் தனது மகனை அழைத்துக் கொண்டு நடந்து செல்கின்றார்.

இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் போலிசார் அந்த இரண்டு கொள்ளையர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் பெண்ணின் செயின் மற்றும் கொள்ளை அடிக்க அவர்கள் பயன்படுத்தி வாகனத்தையும் கை பற்றியுள்ளனர்.

கொள்ளை அடித்தது 20 வயது நல்லி மற்றும் 21 வயது பாலா என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து டெல்லியின் அந்த பகுதி இணை ஆணையர் ரவீந்தர யாதவ் கூறுகையில் , பெண் புகார் அளித்ததும் அந்த பகுதி சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தோம் மற்றும் அங்கு உள்ளவர்களிடம் விசாரித்தோம் பின்னர் கொள்ளையர்களை அடையாளம் கண்டு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கைது செய்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here