Home Tamil Nadu கணவரின் தகாத உறவை தட்டிக்கேட்ட இளம் மனைவிக்கு வரதட்சனை கொடுமை தற்கொலை

கணவரின் தகாத உறவை தட்டிக்கேட்ட இளம் மனைவிக்கு வரதட்சனை கொடுமை தற்கொலை

SHARE

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா (25) இவருக்கும் ஆவடியை சேர்ந்த ரோஸ் முரளி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

ரோஸ் முரளி தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஹெச் ஆர் ஆக பணியாற்றி வந்துள்ளார்.

சிறிது காலம் குழந்தை இல்லாமல் இருந்து பின்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஜோதிடப்படி குழந்தை இந்த தேதி இந்த நேரத்தில் தான் பிறக்க வேண்டும் என்பதற்காக சுகப் பிரசவத்தில் பிறக்க வேண்டிய குழந்தையை சிசேரியேன் செய்து ஜோதிடர் சொன்ன நேரத்தில் வெளியே எடுத்துள்ளனர்.

ஜீவிதா நர்சிங்க படித்து வானகரம் அப்பல்லோவில் மருத்துவருக்கு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். வேலையை விட்டு விட்டு குழந்தையை பார்த்துக் கொள்கின்றேன் எனக் கூறியுள்ளார்.

கணவர் குடும்பத்தார் அதற்கு அனுமதிக்கவில்லை. வேலைக்கு போ பணம் தேவை எனக் கூறியுள்ளனர். வாங்கும் சம்பளம் முழுவதையும் கணவர் வீட்டாரிடமே கொடுத்து வந்துள்ளார் நீவேதிதா.

ஜீவிதா வின் கணர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜீவிதா வை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. கடைசியாக ஒரு கிலோ வெள்ளி குத்து விளக்கை வாங்கி வா என அனுப்பி விட்டுள்ளனர்.

ஜீவிதா குழந்தை

ஜீவிதா வின் குடும்பத்தார் எல்ஐசியில் லோன் எடுத்து அந்த குத்து விளக்கையும் வாங்கி கொடுத்துள்ளனர்.

இதற்கடுத்து வீடு கட்ட வேண்டும் 20 லட்சம் உன் விட்டில் வாங்கி வான என ஜீவிதாவிடம் கூறியுள்ளனர்.

இந்த வரதட்சனை கொடுமை ஒரு பக்கம் இருக்க ஜீவிதா வின் கணவர் ரோஸ் முரளிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகாத உறவு வேண்டாம் என தன் கணவரிடமும் அந்த பெண்ணிடமும் நீவேதிதா கூறியுள்ளார்.

ஜீவிதா கணவருடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் பெண்

”என் கணவருடன் நீங்க ஏன் வெளிய போனீங்க அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருப்பது உங்களுக்கு தெரியாதா” என அந்த பெண்ணிடம் ஜீவிதா பேசும் ஆடியோவும் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகின்றது.

ஒரு பக்கம் வர தட்சனை கொடுமை மறு பக்கம் கணவரின் தகாத உறவு என ஜீவிதா கடும் மன உலச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

தற்கொலை செய்யும் முன் தன் தம்பியிடம் இது குறித்து போனில் பேசியுள்ளார். அந்த போன் ஆடியோவும் வெளியாகியுள்ளது, அக்கா எதுவும் செய்யாத க்கா நாங்க இருக்கோம் என தம்பி சமாதானப்படுத்தியுள்ளார்.

ஜீவிதா கணவரின் அடையாள அட்டை

இருப்பினும் வரதட்சனை கொடுமை மற்றும் கணவரின் தகாத தொடர்பால் கடும் மன உலச்சலுக்கு ஆளான நிவேதிதா சென்னை மின்சார ரயிலில் ஏறி அடையாறு கூவம் ஆறு வரும் போது ரயிலில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து கடந்த 3 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தாயை இழந்த ஒரு வயது பெண் குழந்தை தற்போது கணவர் குடும்பத்தாரின் வசம் உள்ளது.

தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் குழந்தையை எங்களிடம் ஒப்படைக்கக் சொல்லுங்கள் எனக் கோரி ஜீவிதாவின் குடும்பத்தினர் முறையிட்டு வருகின்றனர்.

கள்ள உறவை கண்டித்ததற்காக கூடுதல் வரதட்சனை கேட்டு நீவேதிதா வை கொடுமைப்படுத்தி வந்ததாக ஜீவிதா வின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

ஜீவிதா வுடன் பணியாற்றும் சக தோழிகள் ஜீவிதா எப்பொழுதுமே அழுது கொண்டு தான் இருப்பார் அவரது கணர் வீட்டார் அவரை மிகவும் துன்பபடுத்தினர் எனப் பேட்டி அளித்துள்ளனர்.

வரதட்சனை கொடுமையால் துன்புறுத்தப்பட்ட ஜீவிதா தனது வாழ்கையை பங்கு போடுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தான் நேசித்த கணவர் இன்னொரு பெண்ணுடன் இருப்பதை கண்டு அதை தடுக்க போராடி அதில் தோல்வியுற்றதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here