Home Tamil Nadu இப்பதான் என் மனைவியை அடிச்சுகொன்னுட்டு வர்றேன் வைரலாகும் கணவரின் பரபரப்பு வீடியோ

இப்பதான் என் மனைவியை அடிச்சுகொன்னுட்டு வர்றேன் வைரலாகும் கணவரின் பரபரப்பு வீடியோ

SHARE


அரியலூர் மாவட்டத்தில் விவசாய நிலைத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது இளம் மனைவியை அடித்துகொலை செய்து விட்டு தானும் பூச்சி மருந்தை அருந்தி விவசாயி ஒருவர்தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கொலை செய்து விட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்த நிலையில் ஆட்டோவில் சென்றவாரு அவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”என் மனைவியை நான் அடித்துகொன்னுட்டு வருகின்றேன் நானும் மருந்தை குடித்துவிட்டேன் எனது குடும்பத்தின் இந்த நிலைக்கு இவர்கள் தான் காரணம்” எனக் கூறி ஒரு சில பெயர்களை அவர் குறிப்பிடுகின்றார். அந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் அருகே சன்னாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28) இவரது மனைவி சுகன்யா (25) . இருவருக்கும் அய்யப்பன் (6) மதுசிரி (3) என இரண்டு குழுந்தைகள் உள்ளது.

மணிகண்டன் ஒரு விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தில் கணவன் மனைவி இருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். மேலும் மணிகண்டன் தனக்கு சொந்தமான ட்ராக்டரை வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.

மணிகண்டனுக்கும் சுகன்யாவிற்கும் அடிக்கு சண்டை வந்துள்ளது. சுகன்யா மீது மணிகண்டன் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இருவரின் தகராறு தொடர்பாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு சமாதானம் செய்து வைக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மனைவியை அங்கேயே வைத்து அடித்துக் கொன்றுள்ளார்மணிகண்டன்.

மனைவி விவசாய நிலத்தில் சரிந்து இறந்து விட்டது பார்த்து அங்கிருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். பின்னர் அருகே உள்ள வெங்கனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

பூச்சி மருந்து குடித்த மணிகண்டனை போலிசார் மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது இரண்டு குழந்தைகளும் தாய் தந்தையை இழந்து நிற்கின்றது. சந்தேகத்தின் பேரில் தான் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என போலிசார் செல்போன்களை ஆய்வு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

விவசாய நிலத்தில் இளம் பெண் சரிந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here