Home Tamil Nadu தந்தி டிவியில் இருந்து ஏன் விலகினேன் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ

தந்தி டிவியில் இருந்து ஏன் விலகினேன் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ

SHARE

தந்தி டிவியில் பணியாற்றிய பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியின் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக நேற்றிலிருந்து சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில், தனது ராஜினாமாவை ரங்கராஜ் பாண்டே உறுதி செய்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”ஆம் நான் தந்தி டியில் இருந்து ராஜினிாமா செய்து விட்டேன் ஏன் என்றால்…” என ஆரம்பிக்கும் ரங்கராஜ் பாண்டே 6 நிமிடம் காணொளியில் அதற்கான காரணங்கள் அடுத்து என்ன செய்ய போகின்றார் ஏன் இந்த முடிவு என்பன உள்ளிட்ட பல்வேறு விசயங்களை விளக்குகின்றார்.

இதற்கு முன்னர் அவர் எதில் பணியாற்றினார் , தந்தி டிவியில் அவரது பணி எப்படி இருந்தது தந்தி டிவி நிர்வாகம் மற்றும் ரங்கராஜ் பாண்டேவிற்கும் இடையான விஷயங்கள் குறித்தும் ரங்கராஜ் பாண்டே விளக்கம் அளிக்கின்றார்.

தனது வாழ்கையில் 3 முறை ரிஸ்க் எடுத்ததாகவும் , பொதுமக்களை நம்பி இறங்குவதாகவும் ரங்கராஜ் பாண்டே இதில் கூறுகின்றார்.

“எனது இந்த முடிவு 6-7 பேருக்காவது ஏற்றத்தை கொடுக்கும் என ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார். உலகம் பெரியது என்னன்ன நடக்கப் போகுதுன்னு பாப்போம் எனக்கு கிடைத்த பெரிய பரிசு பொதுமக்கள் நீங்கள் தான், நீங்கள் காட்டிய நம்பிக்கை சாதாரண வியஷம் அல்ல அது எனது பொறுப்புணர்வை இன்னும் அதிகரிக்கின்றது உங்களின் நம்பிக்கையை நான் வீணாக்க மாட்டேன் எந்த காரணம் கொண்டும் உங்களை நான் இழக்க மாட்டேன் இறைவன் என் கூட இருப்பான் என நம்புகின்றேன் என பாண்டே காணொளியில் கூறியுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here