Home India குஜராத், பட்டப்பகலில் கல்லூரி மாணவனை சர்வ சாதாரணமாக கொலை செய்து விட்டு செல்லும் 3 பேர்

குஜராத், பட்டப்பகலில் கல்லூரி மாணவனை சர்வ சாதாரணமாக கொலை செய்து விட்டு செல்லும் 3 பேர்

SHARE


குஜராத்தில் கல்லூரி மாணவரை பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் 3 பேர் சேர்ந்து சர்வ சாதரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யும் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது

பவார் என்ற 19 வயது மாணவர் Veer Narmad South Gujarat University ல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே தனது படிப்பை தொடர்ந்துள்ளார் பவார்.

குஜராத் சூரத்தில் உத்னா என்ற பகுதுியில் நேற்று சனிக்கிழமை, தான் வாங்கிய புதிய பைக்கில் நின்று கொண்டு போனில் பேசிக் கொண்டிருக்கும் போது பைக்கில் வந்த மூன்று பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஒருவன் பவாரின் முதுகில் குத்த மற்றுமொருவன் அவனது கத்தியால் பவாரின் நெஞ்சில் குத்துகின்றான்.

இதில் பவார் நிலைதடுமாறி சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கொலை செய்து விட்டு அந்த மூன்று பேரும் சர்வசாதாரணமாக அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.

இந்த சம்பவத்தின் காட்சிகள் அருகே இருந்து சிசிடிவியில் பதிவாகியுள்ளது. போலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரனை நடத்தி வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here