ஊழல் அதிகாரிகளால் பெரும்பாலும் நாங்கள் வெறும் வயிற்றுடன் தான் படுக்க செல்கின்றோம் ஆர்மி ஜவான் வெளியிட்டுள்ள...

ஊழல் அதிகாரிகளால் பெரும்பாலும் நாங்கள் வெறும் வயிற்றுடன் தான் படுக்க செல்கின்றோம் ஆர்மி ஜவான் வெளியிட்டுள்ள அதிர்ச்சி காணொளி

SHARE

நாட்டை பாதுகாக்கும் நம் இராணுவ வீரர்கள் இராணுவத்தில் உள்ள ஊழலால் வெறும் வயிற்றுடன் உறங்க செல்வதாக இராணுவ ஜவான் Tej Bahadur அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது நாட்டையே தற்போது உழுக்கியுள்ளது.

”ஊழல் அதிகாரிகளால் எங்களது நிலை இங்கு மிகவும் மோசமாக உள்ளது. இந்த மோசமான நிலையில் தான் நாங்கள் நேர்மையாக பணியாற்றி வருகின்றோம்” நாங்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றுடன் தான் படுக்க செல்கின்றோம் என வேகாத சாப்பாத்தி சாப்பிடவே முடியாது குழம்ப ஆகியவற்றை காண்பித்து பேசுகின்றார் இராணுவ ஜவான் Tej Bahadur.

மக்களுக்கு ஏதுாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே நம் இராணு வீரர்களை உதாரணம் காட்டும் அரசாங்கம் அவர்களை இவ்வளவு வேதனைப்பட வைத்து ஒழுங்கான உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதற்கு நாடும் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

நம்மை காக்கும் இராணுவ வீரர்களுக்கு உண்ண ஒரு வேலை உணவு இல்லையா பட்டிணியோடவா அவர்களை படுக்க வைக்கின்றீர்கள் எங்களது வரிப் பணத்தை என்ன செய்கின்றிர்கள் என இந்த காணொளியை பார்த்த சமூக இணையதள வாசிகள் கருத்துக்களை எழுதி கொந்தளித்துள்ளனர்.

Tej Bahadurகூறுகையில் நாங்கள் இது போன்ற படும் துன்பதை தயவு செய்த மீடியாக்கள் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் எனக் கோரிக்கை வைக்கின்றார்.

.

NO COMMENTS

LEAVE A REPLY