Home Tamil Nadu தேடப்படும் பலான பெண்ணிற்கு வழிகாட்டும் காவலர் வைரலாகும் ஆடியோ

தேடப்படும் பலான பெண்ணிற்கு வழிகாட்டும் காவலர் வைரலாகும் ஆடியோ

SHARE

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் காவல் நிலையத்தில் பாலில் தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பூங்கொடு என்ற பெண்ணை போலிசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பெண், காவலர் ஒருவரிடம் எப்படி இதிலிருந்து தப்பிப்பது என உதவி கேட்கும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

தமிழ் பொண்ணுங்க மத்த மாநில பொண்ணுங்கல்லாம் இருக்காங் முடிச்சுட்டு வெளிய வரும் போது அவங்கள புடுச்சுட்டாங்க என்னைய தலைமறைவுன்னு போட்ருக்காங்க நான் இப்ப வீட்ல இல்ல இப்ப அவங்களயும் காப்பாத்தனும் என்னையும் காப்பாத்திகனும் நான் என்ன செய்றது சொல்லுங்க என அந்த பெண், காவலரிடம் கேட்க.. அது நம்ம லிமிட் தான் பாத்துக்கலாம். நீ கோர்ட்ல போய் ஜாமின் வாங்கிக்க லேடிஸ் என்பதால் அப்டில்லாம் ஒன்னும் செய்ய மாட்டாங்க என ஆறுதல் கூறி ஆலோசனை வழங்குகின்றார் காவலர் ஒருவர்.

யாரு போட்டு விட்டாங்கன்னு தெரியல மப்டில வந்து புடுச்சுட்டு போயிட்டாங்க என்ன பன்றதுன்னு எனக்கு தெரியல என அந்த பெண் கூறுகின்றார். ஆமா அந்த கேஸ்ல உன்னையும் போட்ருக்காங்க அதான் நான் உன்னயை கூப்புட்டு சொல்றேன் என அலர்ட் செய்கின்றார் அந்த காவலர்.

ரொம்ப ரகசியமாக பேசுவது போன்ற அந்த பெண் தனது குரலை வைத்துக் கொள்கின்றார். ரெண்டு பேர ஜாமினுக்கு ரெடி பன்னிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை என்கின்றார் அந்த காவலர்.

கோர்ட்ல ஜாமின் வாங்கிக்க என அந்த காவலர் கூற கோர்ட்டுன்னா நிறைய பேரு என்னைய பாப்பாங்களா என கேட்கின்றார் அந்த பெண். கோர்ட் னாலும் போலிஸ் நிலையம்னாலும் எல்லாரும் பாக்கத்தான் செய்வாங்க எனக் கூறுகின்றார் அந்த காவலர்.

தேடப்படும் பாலியல் குற்றவாளிக்கு காவலரே வாலண்டியரா போன் செய்து ஆலோசனை கூறியிருப்பது பொதுமக்கள் மற்றும் காவல் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போன் உரையாடலில் இருந்து போனில் பேசுவது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் கும்பலின் தலைவி என்பது போன்று தெரிகின்றது. ஏற்கனவே நிர்மலாதே விவகாரம் வெடித்த நிலையில் இப்படிப்பட்வர்களிடம் காவலர் ஒருவர் சர்வசாதாரணமாக சவகாசம வைத்திருப்பது பல்வறு சந்தேகங்களை எழுப்புகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here