Home Tamil Nadu புடவையை நூதனமாக திருடி ஏமாற்றியதாக பெண்ணை சரமாரியாக தாக்கிய ஜவுளிக் கடை ஊழியர்கள்

புடவையை நூதனமாக திருடி ஏமாற்றியதாக பெண்ணை சரமாரியாக தாக்கிய ஜவுளிக் கடை ஊழியர்கள்

SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் அருகே துணிக் கடையில் நூதனமாக புடவையை திருடியதாக கூறி பெண் ஒருவரை கடை ஊழியர்கள் அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அட்டக்குரிக்கி கிராமத்தை சேர்ந்த சரோஜா என்ற பெண் தீபாவளியை முன்னிட்டு சூளகிரியில் உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளார். ”இந்த புடவைய போன வாரம் வாங்கினேன் நீங்க பில்லு எடுத்துட்டு வரல இந்த புடவை எனக்கு வேண்டாம் அதோட காசு கொடுங்க” எனக் கேட்டதாக கூறப்படுகின்றது.

இந்த மாடல் புடவையே இப்பொழுது தான் வந்துள்ளது, சற்று நேரத்திற்கு முன்பு தான் நீ வந்து இதை திருடி சென்றாய் அதை நாங்கள் பார்த்தோம் இப்ப வந்த திருடியது மட்டுமல்லாமல் எங்க புடவைய திருடி எங்க கிட்டயே பணம் கேக்குறியா காசு என்ன சும்மாவா வருது” எனக் கூறி கடை ஊழியர்கள் அந்த பெண்ணை தாக்கினர்.

கெட்ட வார்தைகளில் பேசி ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் அவரை தாக்க, மற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் அது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை காணொளியாக பதிவு செய்து கடை உரிமையாளரே முகநூலில் வெளியிட்டுள்ளார்.

தன்னை அமவமானப்டுத்திவிட்டதாக காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளிக்க போவதாகவும் , இந்த பெண் திருடி எங்களை ஏமாற்றியுள்ளதாக கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

”புடவையை மாற்ற வருபவர்கள் பில் இல்லாமல் வருவார்களா , இது போன்றவர்கள் திருடி செல்வதால் கல்லாவை என்னும் போது காசு குறைந்தால் எங்கள் சம்பளத்தை தான் பிடிக்கின்றார்கள் இதனால் நாங்கள் தான் பாதிக்கப்படுகின்றோம் இவர் மாட்டவில்லை எனில் எங்கள் சம்பளம் தான் போயிருக்கும்” என கடை ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

அவர் குற்றமே செய்திருந்தாலும் ஒரு பெண்ணை ஆண் அடித்தது தவறு, காவல்துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் எனவும் ஒரு சாரார் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here