Home India மீண்டும் ஓர் ஆணவக் கொலை சடலத்தை பார்த்து கதறும் காதலி

மீண்டும் ஓர் ஆணவக் கொலை சடலத்தை பார்த்து கதறும் காதலி

SHARE

தெலுங்கானா மாநிலம் கரிம்நகரில் மாவட்டத்தில் மேலும் ஒரு ஆணவ கொலை அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் தடிகல் கிராமத்தை சேர்ந்த குமார் (24) அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்.

குமார் டிகிரி முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். குமாரும், அவர் காதலித்த 12 ஆம் வகுப்பு மாணவியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலி வீட்டில் இருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காதலியின் பெற்றோர் குமாரை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். தங்களது பெண்ணை பின் தொடராதே மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னரே குமாரை காதலியின் உறவினர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் காவல் நிலையத்திலும் குமார் குறித்து புகார் அளித்துள்ளனர். தனது மகளை தொந்தரவு செய்வதாக மாணவியின் உறவினர்கள் அளித்த புகாரில் ஏற்கனவே போலிசார் குமாரை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

காதலிக்கு 18 வயது இன்னும் ஆகவில்லை என்பதால் அவர் மைனராக உள்ளார். இதனால் குமார் வீட்டுக்கு தெரியாமல் காதலியை மணப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வரும் தீபாவளியுடன் காதலிக்கு 18 வயது நிறைவடைவதால் நவம்பரில் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என திட்டமிட்டிருந்துள்ளனர்.

இது பெற்றோருக்கு தெரிந்து மீண்டும் குமாரையும் தன் வீட்டு பெண்ணையும் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் குமார் கடந்த திங்கள் கிழமை அன்று காதலியை சந்திப்பதற்காக அவரது ஊருக்கு வந்துள்ளார். வந்த குமார் வீடு திரும்பவில்லை.

குமாரின் உறவினர்கள் குமாரை தேடி வந்த நிலையில் நேற்று அவரது உடல் வெங்கயலாகுடம் பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட குமார்

குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் இது ஆணவ கொலையாக இருக்கலாம் என முதற்கட்ட தகவலில் போலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு குமாரின் கிராமத்தினர் வந்து காதலியின் உறவினர்களை கைது செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். விசாரனைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் தெரிவித்ததை தொடர்ந்து குமாரின் உறவனிர்கள் அந்த இடத்திலயே போராட்டத்தில் இறங்கினர். ஆத்திரத்தில் போலிஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பின்னர் போலிசார் குமாரின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தெலுங்கான மாநிலத்தில் சமீபகாலமாக தொடர்ச்சியாக இது போன்று சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here