Body of Youth Found In Chennai Koovam River

Body of Youth Found In Chennai Koovam River

SHARE

சென்னை சிந்தாதிரிபேட்டை கூவம் ஆற்றங்கரையில் இன்று காலை இளைஞர் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. இவர் கண்ணகி நகரை சேர்ந்த முகேஷ் என தெரிய வந்துள்ளது. முகேஷின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் எழுந்துள்ளன. இன்று அதிகாலையில் சிந்தாதிரிபேட்டையில் 4 பேர் கொண்ட ஒரு கும்பல் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த ஒரு நபரை 4 பேரும் மடக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிப்பதற்கு முயற்சி செய்ததாகவும் அப்போது அந்த நபரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் 4 பேரை துரத்தியதாக தெரியவந்துள்ளது.

அதில் ஒருவர் தான் தப்பிப்பதற்காக இந்த கூவம் ஆற்றில் குதித்திருக்கிறார். அப்போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. மற்றொரு நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். மீதமுள்ள 2 பேர் தப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. இது காவல்துறையின் தரப்பிலும், பொதுமக்களின் தரப்பிலும் கூறப்படுகிறது. ஆனால் இறந்த முகேஷின் உறவினர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

daily_news_428692102433

கண்ணகி நகரை சேர்ந்த இவர்கள் 4 பேரும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் கண்ணகிநகரில் இருந்தாலும் கூட இவர்களது பூர்விகம் இந்த பகுதியில் உள்ள புதுப்பேட்டை தான். இதனால் தங்கள் உறவினர் ஒருவருடைய துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று அவர்கள் புதுப்பேட்டைக்கு வந்ததாகவும், அப்போது அதிகாலையில் சிந்தாதிரிபேட்டையில் நடந்து வந்த போது போலீசார் அவர்களை விசாரித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் சந்தேகத்திற்கிடமாக வந்த போது போலீசார் விசாரித்தது மட்டுமில்லாமல் அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதில் இருந்து தப்பிப்பதற்காக 4 பேரும் ஓடியுள்ளனர். அதில் ஒருவர் தான் கூவம் ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் முகேஷின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மரணத்தில் உள்ள சந்தேகங்கள் முழுமையான விசாரணைக்கு பின் தான் தெரிய வரும்.

NO COMMENTS

LEAVE A REPLY