Home India என்னடா இது நியாயம் உங்கள சும்மா விடாது எங்க சாபம் தூத்துக்குடி சம்பவம் குறித்து கானா...

என்னடா இது நியாயம் உங்கள சும்மா விடாது எங்க சாபம் தூத்துக்குடி சம்பவம் குறித்து கானா பாலா உருக்கம்

SHARE


தூத்துக்குடி சம்பவத்திற்கு பொதுமக்கள் சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து காணொளிகளை பதிவு செய்து வரும் நிலையில் . திடீர் என சம்பந்தமே இல்லாமல் ஜெயலலிதா ஆடியோவை ஊடங்கள் வெளியிட்டது. தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்பவே இந்த யுக்தி என பலர் குற்றம் சாட்டினர்.

இதை வெளியிட்டால் பொதுமக்கள் தூதுக்குடியை விட்டு விட்டு ஜெயலலிதாவை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள் என எண்ணியர்களின் கனவு பொய்யாகிப் போனது. அந்த செய்தியை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதோடு . தூத்துக்குடில ஏன் சுட்டென்னு நாங்க கேட்டா ஜெயலலிதா ஆடியோவ ரிலீஸ் பன்றியா என கண்டனங்களை காணொளிகயாக பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்.

தூத்துக்குடி சம்பவத்தை சிறிதும் நீர்த்துக் பொக் செய்யவி்ல்லை இந்த ஜெ ஆடியோ ரிலீஸ்.

தூத்துக்குடி சம்பவம் குறித்து கானா பாலா பாடியுள்ள உருக்கமான பாடல் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

”என்னடா இது நியாயம் உங்கள சும்மா விடாது எங்களோட சாபம்“ என எடுத்த எடுப்பிலேயே அதிரடியை காட்டியுள்ளார் கானா பாலா!

”100 நாள் மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தினார்கள் இந்த அரசாங்கம் மக்களை சுட்குருவியா சுட்டு கொன்னுட்டான்” என பாட்டில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கானா பாலா!

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கானா பால தனது பாட்டில் குறிப்பிடுகின்றார்.

மொத்தத்தில் சமூக வலைதளத்தில் எழுந்துள்ள மக்களின் குரலை பாட்டில் வடித்துள்ளார் கானா பாலா!

கானா பாலாவின் இந்த தூத்துக்குடி பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here