Home India உணவகத்தில் போலிஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய பாஜக கவுன்சிலர் பெண் வக்கீலுக்கும் அடி

உணவகத்தில் போலிஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய பாஜக கவுன்சிலர் பெண் வக்கீலுக்கும் அடி

SHARE

உபி மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த போலிஸ் எஸ் ஐ யை அப்பகுதி பிஜேபி கவுன்சிலர் சரமாரியாக தாக்கியதில் போலிஸ் எஸ் கீழே விழும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. எஸ் ஐ யுடன் வந்த பெண் வழக்கறிஞரும் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அடி வாங்கிய எஸ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கவுன்சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.

நேற்று இரவு சுக்பால் சிங் என்ற போலிஸ் எஸ் ஐ Meerut-Dehradun Bypass என்ற பகுதியில் உள்ள உணவகத்திற்கு தனது பெண் வழக்கறிஞர் நண்பருடன் சென்றுள்ளார்.

ஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆகியுள்ளது. இதனால் அந்த பெண் வழக்கறிஞர் வெயிட்டரை அழைத்து உணவு ஏன் தாமதாகின்றது எனக் கேட்டு சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இந்த உணவகம் அந்த பகுதி பிஜேபி கவுன்சிலர் மனிஷ் என்பவருக்கு சொந்தமானனது. வெயிட்டர் ஓனரிடம் இது குறித்து கூற அங்கு வந்த பிஜேபி கவுன்சிலர் அந்த பெண்ணுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடன் வந்த எஸ் ஐ இதில் தலையிட ஆத்திரபட்ட பாஜக கவுன்சிலர் எஸ் ஐ யை சரமாரியாக தாக்குகின்றார். அவருடன் வந்த பெண்ணையும் அங்கு இருந்த ஊழியர்கள் தாக்குகின்றனர். ஒரு கட்டத்தில் எஸ் ஐ இதை தனது செல்போனில் வீடியோ எடுக்க முற்படும் போது பாஜக கவுன்சிலர் தடுத்து நிறுத்தி எஸ் ஐ யை தாக்குகின்றார்.

இரு தரப்பும் கெட்ட வார்த்தையில் அசிங்மாக திட்டிக் கொள்கின்றனர். போலிசுடன் வந்த பெண் டேபிளில் இருந்த பொருளை தாக்க வந்தவர்கள் மீது தூக்கி எறிகின்றார்.

இதை தொடர்ந்து எஸ் உடன் வந்த பெண் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண் விவகாரம் உள்ளிட்ட பிரிவுகளில் கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பணியின் போது தனக்குரிய ஏரியாவில்லை இல்லை எனக் கூறி எஸ் ஐ மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக மீரட் போலிஸ் ADG செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியாக விசாரனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தொண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலிஸ் எஸ் ஐ யை பாஜக கவுன்சிலர் சரமாரியாக தாக்கி எஸ் ஐ கீழே விழும் அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here