Home India பலர் முன்னிலையில் பெண் பயணியிடம் தவறாக நடந்த காவலரை சட்டையை பிடித்து ப்ளார் என அறைந்த...

பலர் முன்னிலையில் பெண் பயணியிடம் தவறாக நடந்த காவலரை சட்டையை பிடித்து ப்ளார் என அறைந்த பயணி

SHARE


மும்பை கல்யால ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் பலர் முன்னிலையில் தவறாக நடந்த குடிபோதையில் இருந்த ரயில்வே போலிசை அருகில் இருந்த சக பயணி ப்ளார் என அறையும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

மஹாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் உள்ள பிரதான ரயில் நிலையமான கல்யானில் பெண் ஒருவர் தனது சிறு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றார். அந்த பெண்ணிற்கு அருகில் ரயில்வே போலிஸ் அமர்ந்திருக்கின்றார்.

தனக்கு அருகில் இருந்த அந்த பெண்ணிடம் ரயில்வே காவலர் தவறான முறையில் தொடர்ச்சியாக நடக்கின்றார். அந்த பெண் ஒதுங்கி ஓதுங்கி செல்ல ரயில்வே காவலர் தொடர்ச்சியாக தனது சேட்டையை செய்கின்றார்.

இதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபர் வீடியோ எடுத்ததோடு நிற்காமல் ”அவன புடுச்சு அடிங்க அந்த பெண்ணிடம் தவறாக நடக்கின்றான் பாருங்கள்” என சத்தமிட அருகில் அமர்ந்திருந்த சக பயணி சட்டென எழுந்து ரயில்வே காவலரின் சட்டையை பிடித்து ப்ளார் என அறைகின்றார்.

பின்னர் பொதுமக்கள் அங்கு கூடி விடுகின்றனர். பொதுமக்களை மிரட்டும் அந்த காவலரை பெண் ஒருவர் செருப்பால் அடித்து இவன போலிஸ் பிடித்துக் கொடுங்க என துணிச்சாலக குரல் கொடுக்கின்றார். அந்த ரயில்வே காலவர் பயந்து ஓடுகின்றார்.

வீடியோ எடுத்த நபர் தொடர்ச்சியாக அந்த காவலருக்கு எதிராக குரல் கொடுத்த வண்ணம் இருந்தார். காவலர் குடிபோதையில் இருப்பது காணொளியில் நன்றாக பதிவாகியுள்ளது.

பொதுமக்களின் இந்த துணி்ச்சலான செயலை பலர் பாராட்டி இந்த காணொளியை சமூக வலைதளத்தில் பகிாந்து வருகின்றனர்.

பொதுமக்களை காக்க வேண்டிய காவலரே குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பல்வெறு கேள்விகளை எழுப்பி வருகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here