Home India தன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன்! அழும் தாய் கரையாத மகனின்...

தன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன்! அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்

SHARE


கர்நாடக மாநிலம் பெங்களுரில் தாய் கண்டித்ததால் ஆத்திரமடைந்து 19 வயது மகன் தாயை இரக்கமின்றி தாக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகனின் பெயர் ஜீவன். மகனின் செல்போனை தாய் பரிசோதித்த போது அதில் தவறான புகைப்படங்கள் இருந்துள்ளது. ஸ்டைலாக புகைப்பிடித்து அதை செல்ஃபி எடுதது தனது மொபைலில் வைத்துள்ளான் ஜீவன். இதை பார்த்த பிறகு தான் தாய்க்கு தெரிகின்றது மகனுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது என்பது.

மேலும் ஒரு இளம் பெண்ணுடன் ஜீவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் செல்போனில் இருந்துள்ளது. இவைகளை பார்த்த தாய் தன் மகன் ஒழுக்கக் கேட்டின் உச்சிக்கு சென்றுள்ளதை அறிந்து வேதனை அடைந்துள்ளார். இதை தொடர்ந்து மகனுக்கு புத்திமதி சொல்லி கண்டித்துள்ளார்.

”அம்மா கிட்ட மாட்டிக்கிட்டோமோ என பயப்பட்டு சரிம்மா இனிமே செய்யமாட்டேம்மா” என சொல்லுவான் என எதிர் பார்த்த தாய்க்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது.

”நீ எப்படி என் செல்போன எடுத்து பாத்த ? நீ எப்படி என்ன கண்டிக்கலாம் ? , என் கேல்பிரண்டு போட்டோவ நீ எதுக்கு எடுத்து பாத்த ?” என மகன் தாயை துடைப்பத்தால் சரமாரியாக தாக்க தாய்க்கு என்ன செய்வது என தெரியவில்லை.

ஜீவனின் செல்போனில் இருந்த புகைப்படங்கள்

மகனுக்கு பயந்து தாய் அழுத படி சோபாவில் அமர்ந்திருக்க தாயை சரமாரியாக திட்டி தாக்குகின்றான் மகன். இதை அவரது இன்னொரு மகள் செல்போனில் பதிவு செய்கின்றாள். ”ஏன்டா அம்மாவ அடிக்கிற” என அந்த மகளும் கேட்கவில்லை.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மகன் என்பதால் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இது குறித்து பேட்டி அளித்துள்ள பெங்களுர் காவல்துறை அதிகாரி அண்ணாமலை தாய் புகார் அளிக்கவில்லை என்றாலும் காவல்துறை வழக்கு பதிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காணொளியை பார்த்த மாநில மகளீர் ஆணையம் தானாக முன் வந்து மகனின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

மகனுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமூக வலைதளத்தில் பலர் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.

ஒவ்வொரு பெற்றோரும் இது போன்று தங்களது குழந்தைகளின் செல்போன்களை பரிசோதித்தால் பல அதிர்ச்சிகள் காத்திருக்கலாம். குழந்தைகள் சீரழிவதற்கு அடிப்படை காரணம் இந்த செல்போன்கள். இந்த தாய் எதை நினைத்து அழுதாரோ , மகன் அடித்ததை நினைத்து அழுதாரா அல்லது இப்படிப்பட்ட மகனையா நாம் வளர்த்து வருகின்றோம் என நினைத்து அழுதாரா எனத் தெரியவில்லை.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here