Home Tamil Nadu கும்பகோணம் இளம் ஆசிரியர் , சிரித்தபடி உலா வந்த காதலன்

கும்பகோணம் இளம் ஆசிரியர் , சிரித்தபடி உலா வந்த காதலன்

SHARE

திருமணம் நிச்சயிக்கப்பட்டு 5 நாட்களே ஆன இளம் பெண் ஆசிரியர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காதலனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சாலையில் ஓடி வந்து விழுந்து வசந்த பிரியா என்ற அந்த பெண் உயிரிழந்த சம்பவம் நடந்து அன்று அவரை கொலை செய்தது யார் என்று தெரியாத நிலையில் போலிசாரின் தீவிர விசாரனையில் அவரை கொலை செய்தது அவரது அத்தை மகன் தான் என்பது தெரியவந்தது.

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை (அத்தை மகளை) கழுத்து அறுத்து கொலை செய்த வசந்தகுமாரை போலிசார் கைது செய்த நிலையில் வசந்தகுமார் சிரித்தப்படி போலிசாருடன் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

கொலை செய்து விட்டோமே மாட்டிக் கொண்டோமே என்ற துளி அச்சம் கூட இல்லாமல் சிரித்தப்படி கொலை குற்றவாளி ஹாயாக போலிசாருடன் வாக்கிங் செல்வது பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல் நொள்ளக்காதல் என சமீப காலமாக காதல் என்ற பெயரில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் அதிலிருந்து விழிப்புணர்வு பெறாமல் தொடர்ச்சியாக காதல் வலையில் விழுந்து இது போன்று உயிர்கள் பலியாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

இது ஓருபுறமிருக்க கொலை செய்த குற்ற உணர்வே இல்லாமல் எந்த அச்சமும் இன்றி போலிசாருடன் சிரித்தப்படி குற்றவாளி செல்வது குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்படுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

கொலை செய்யப்பட்ட வசந்த பிரியா

நந்தகுமாரும் வசந்தபிரியாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இருவரும் சேர்ந்து காதலித்தாக ஒரு சாராரும் வசந்தகுமார் ஒரு தலைபட்சமாக காதலித்ததாக ஒரு சாராரும் கூறுகின்றனர்.

வசந்தபிரியா கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 28 ஆம் தேதி அவரது வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சியதார்த்தம் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தன்று வசந்தபிரியாவிற்கு போன் செய்த நந்தகுமார் உன்னிடம் கடையாக பேச வேண்டும் என பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அவரை நம்பி அவரது பைக்கில் ஏறி சென்ற வசந்தபிரியாவை காவிரிக்கரைக்கு அழைத்து சென்ற வசந்தகுமார் ஏன் என்னை திருமணம் செய்யவில்லை எனக் கூறி அங்கு வைத்து கழுத்தை அறுத்துள்ளார்.

துடிதுடித்தபடி சாலையில் ஓடி வந்தவாரு வசந்தபிரியா நடுரோட்டில் உயிரிழந்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here