Home India சாலையோரம் பள்ளி மாணவியின் செயல் சமூக வலைதளத்தில் வைரலாகும் காணொளி

சாலையோரம் பள்ளி மாணவியின் செயல் சமூக வலைதளத்தில் வைரலாகும் காணொளி

SHARE

கேரள பள்ளி மாணவியின் செயல் காண்போரை நெகிழ வைத்து தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. பள்ளிப் பையை சுமந்து கொண்டு பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையோரம் மன நலம் குன்றிய நிலையில் ஒரு பெண்ணை பார்த்த அந்த மாணவி அந்த பெண்ணை அப்படியே கடந்து போக மனம் இல்லாமல் நின்றுள்ளார்.

உடனே தனது மதிய உணவிற்காக வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவை வெளியே எடுத்து அத்துடன் ஒரு தட்டை நன்றாக கழுவி அதில் தனது உணவை வைத்து அந்த பெண்ணிற்கு அந்த மாணவி பரிமாறி தன் ஈர நெஞ்சத்தை வெளிப்படுத்தினார்.

இதை அந்த மாணவிக்கு தெரியாமல் தூரத்தில் நின்ற ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த காணொளி சமூக வலைதளத்தில் பலரின் பாராட்டை பெற்று பரவி வருகின்றது.

அந்த மாணவியை பாராட்டுவதுதோடு இப்படி குணமாக மாணவியை வளர்த்த பெற்றோருக்கும் சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here