Home India இரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம்...

இரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்

SHARE


16 வயது 9 ஆம் வகுப்பு மாணவி குண்டடி பட்டு சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது அவரை காப்பாற்றுவதற்கு பதிலாக சுத்தி நின்று செல்போனில் படம் பிடிப்பது மட்டுமல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு லேசான சுய நினைவுடன் இருந்த பெண்ணை முற்றிலும் சுயநினைவற்று ஆக்கும் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

உபி மாநிலம் சஹரன்புர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜுலி என்ற 16 வயது பெண் அந்த பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த திபு என்ற வாலின் ஒரு தலை பட்சமாக ஜுலியை காதலித்து வந்துள்ளான். சம்பவத்தன்று பள்ளி முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஜுலியை இடைமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளான். ஜுலை மறுத்ததை தொடர்ந்து தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஜுலையை 4 முறை சுட்டுள்ளான்.

இதில் ஜுலை நிலை தடுமாறி ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்துள்ளார் ஜுலி. சாலையில் ரத்த வெள்ளத்தில் இளம் பெண் கிடப்பதை பார்த்தம் அங்கு கூட்டம் கூடியுள்ளது.

நம்மை காப்பாற்ற வருகின்றார் என நினைத்த மாணவிக்கு ஏமாற்றம் தான் மிச்சமாகியுள்ளது. அந்த பெண்ணை வீடியோ எடுப்பது பெண்ணிடம் சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்பது என ஒருவருக்கும் அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை.

ரெத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பெண் இரு கரம் கூப்பி எண்ண காப்பாத்துங்க என கெஞ்சியும் யாரும் அதில் முனைப்பு காட்டியது போன்று தெரியவில்லை. ஒரு சிலர் ஆம்புலன்சிற்கு போன் பன்னுங்க என சத்தம் போடுகின்றனர்.

இறுதியில் காவல்துறைக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்து மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மாணவியை சுட்ட வாலிபன் தலைமறைவாகியுள்ளான். போலிசார் அவனை தேடி வருகின்றனர். சாதாரண சிறுவர்களிடம் கூட துப்பாக்கி இருக்கும் அளவிற்கு உபியின் நிலை உள்ளதே அங்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றதா என சமூக வலைதளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here