Home Tamil Nadu சர்கார் விவகாரம் அரிவாளுடன் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினரை ஆபாசமாக பேசி மிரட்டும் வாலிபர்கள்

சர்கார் விவகாரம் அரிவாளுடன் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினரை ஆபாசமாக பேசி மிரட்டும் வாலிபர்கள்

SHARE

சர்கார் பட விவகாரம் அதிமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி அமைச்சர்களின் கண்டனத்திற்கு பின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு அமைச்சர்கள் இன்று அதை வரவேற்று பாராட்டி பேட்டி அளித்து வரும் நிலையில் விஜய் ஆதரவாளர்கள் என்ற பெயரில் இரண்டு வாலிபர்கள் அதிமுகவினர் மற்றும் அமைச்சர்களை அரிவாளுடன் மிரட்டுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

”எங்க தளபதி விஜய் காக பாக்குறோம் இல்ல… நடக்றத வேற நாங்க ஏதாவது பன்னா அவரு பேரு கெட்ரும்” எனச் சொல்லி கொண்டே ஆபாச வார்த்தைகளில் வசைபாடி அதிமுக மற்றும் அமைச்சர்களை சரமாரிய அந்த இரண்ட வாலிபர்கள் திட்டி மிரட்டல் விடுக்கும் வண்ணம் பேசியுள்ளனர்.

உண்மையில் இது விஜயின் ஆதரவாளர்கள் பேசிய காணொளியா அல்லது அவருக்கு எதிரானார்கள் தயாரித்த காணொளியா என்ற விபரங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

”காசி தியேட்டருக்கு வா நான் ஊர்ல இல்லாதப்ப வந்த பேனர கிழிச்சு சீன் போட்டிய நாளைக்கு வந்து கிழி பாப்போம்” என அந்த வாலிபர்கள் காணொளியில் சவால் விடுகின்றனர்.

பிரச்சனைகள் சரியான நிலையில் இவ்வாறு பேசுவது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் சம்பந்தப்பட்டவர்கள் இதில் தலையிட்டு உனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் இந்த காணொளியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

படத்தின் இயக்குனரை 27 ஆம் தேதிவரை கைது செய்யக் கூடாது அதே நேரத்தில் விசாரனைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடதக்கது.

இரண்டு வாலிபர்கள் இருட்டில் முகம் சரியான முறையில் தெரியாது வாரு பேசும் அந்த காணொளி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

காணொளியில் பேசும் இருவரை சென்னை போலிசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here