Home Tamil Nadu மீண்டும் அட்டகாசம் பயணிகளை அச்சுறுத்தும் வண்ணம் ஓடும் பேருந்தில் உயிர் போகும் விபரீதம்

மீண்டும் அட்டகாசம் பயணிகளை அச்சுறுத்தும் வண்ணம் ஓடும் பேருந்தில் உயிர் போகும் விபரீதம்

SHARE


ஓடும் பேருந்து மற்றும் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் கெத்து காட்டுகின்றேன் என்ற பெயரில் பயணிகளை அச்சுறுத்தும் வண்ணம் ஆயுதங்களுடன் மற்றவர்களை அலற விடுவதும் உயிர் போகும் அளவில் விபரீதங்களை அரங்கேற்றுவதும் அவ்வப் போது வாடிக்கையாகி வருகின்றது. குறிப்பாக சென்னையில் அவ்வப் போது இந்த சம்பவங்கள் ஆறங்கேறி இறுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டு எக்கரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இது மாதிரியான மற்றுமொரு காணொளி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

ஓடும் பேருந்தில் வாலிபர்கள் கானா பாட்டு பாட ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருக்கும் அரசு பேருந்தின் டயரில் காலை வைத்து மற்ற பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் கெத்து காட்டுகின்றேன் என்ற பெயரில் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு சிறிய அசைவு மாறினால் உயிர் போகும் இந்த ஆபத்தான செயலை அந்த வாலிபர் செய்ய மற்றவர்கள் அவரை உற்சாகப்படுத்துவது காணொளியில் பதிவாகியுள்ளது.

மேலும் சாலையில் செல்லும் இளம் பெண்களை பார்த்ததும் அவர்களின் அலப்பறை அதிகமாவதையும் காணொளியில் காண முடிகின்றது.

ஓட்டுனருக்கு இது தெரியுமா அல்லது தெரிந்தே வண்டியை தொடர்ந்து இயக்கினாரா ஏன் வாலிபர்களை கண்டிக்கவில்லை என்ற கேள்வியும் சமூக வலைதளத்தில் எழுப்பப்படுகின்றது.

தங்களின் ஆசைகளை துறந்து குழந்தைகள் எப்படியாவது படித்தால் போதும் என கஷ்டப்பட்டு பெற்றோர்கள் படிக்க அனுப்ப , அதை பற்றி சிறுதும் கவலை இல்லாமல் அவர்களது உயிருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தான விதத்தில் வாலிபர்கள் ஈடுபடுவது இருவரின் கனவையும் பாலாக்கும் செயலாகும்.

பேருந்து பற்றாக் குறையால் ஒரு சில நேரங்களில் படிக்கட்டில் பயணிக்கும் நிலை ஏற்படுவதாக சிலர் கூறினாலும் , காலியாக செல்லும் பேருந்துகளிலும் கெத்து காட்டுகின்றேன் என்ற பெயரில் விபரீதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் இந்த காணொளியை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here