Home Tamil Nadu மனைவியின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்த வந்த வாலிபர்

மனைவியின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்த வந்த வாலிபர்

SHARE


கட்டிய மனைவி கள்ளக்காதலனுடன் இருப்பதை நேரில் கண்ட கணவன் மனைவியின் தலையை துண்டாக்கி வெட்டி எடுத்து அந்த தலையுடன் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ள சம்பவம் கர்நாடக மாநிலம் சிவானி என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு, தரிகரே தாலுகா சிவானி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் இவருக்கு வயது 35, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரூபா (28) விற்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

ட்ரைவர் ஆக பணியாற்றிய சதீ்ஷ் ட்ரைவர் வேலையை விட்டு விட்டு மட்டன் கறி கடை நடத்தி வந்துள்ளார்.

இவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளது. ரூபாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாகவும் அதை சதீஷ் பலமுறை கண்டித்தும் ரூபாய கேட்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

கடந்த 9 ஆம் தேதி வெளியுருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சதீஷ் தனது மனைவி கள்ளக்காதலனுடன் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்துள்ளார். ஆத்திரத்தில் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கள்ளக்காதலன் தப்பி ஓடியுள்ளான். மனைவியின் கழுத்தை துண்டாக வெட்டி எடுத்துள்ளார் சதீஷ்.

கணவர் சதீஷ் மனைவி ரூபா

வெட்டிய தலையை சாக்கு பையில் போட்டு 20 கிலோ மீட்டர் பைக்கில் பயணம் செய்து காவல் நிலையத்தில் தலையுடன் சரண் அடைந்துள்ளார்.

வாலிபர் ஒருவர் பெண்ணின் தலையுடன் வருவதை கண்ட போலிசார் அதிர்ச்சியில் உரைந்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது கணவன் சதீஷ் குமார் 15 நான் நீதிமன்ற காவலில் உள்ளார்.

”அளவு கடந்து என் மனைவியை காதலித்தேன் . ஆனால் அவள் என்னை ஏமாற்றி விட்டாள், 3 லட்சம் கடன் வாங்கி அவளது கள்ளக்காதலனுக்கு கொடுத்தால். அவன் என்னிடம் இந்த முறை தப்பி விட்டான் நாள் வெளியே வந்து அவனை பழி வாங்காமல் விட மாட்டேன் என் வாழ்கையையும் என் குழந்தைகள் வாழ்கையையும் நாசமாக்கி விட்டான்” என சதீஷ் போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

”அபிராமி வெர்சன் 2 வித் டிஃப்ரண்ட் க்ளைமேக்ஸ்”


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here