Home Tamil Nadu ரேஷன் கடை பெண் ஊழியரின் அநாகரீக செயல் , வைரலாகும் வீடியோ

ரேஷன் கடை பெண் ஊழியரின் அநாகரீக செயல் , வைரலாகும் வீடியோ

SHARE

மீன் மார்கட்டில் விலையை குறைத்து ஏட்டால் எப்படி அநாகரீமாக சிலர் பேசுவார்களோ அதே பாணியில் ரேஷன் கடை பெண் ஊழியர் ஒருவர் பேசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ரேஷன் கடை ஊழியர் பேசும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பலரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

”இன்னா சும்மா பேசினுகீர” என சென்னை பாசையில் ரேஷன் பொருள் வாங்க வந்த பெண்ணை மிகவும் தரக்குறையாக ரேஷன் கடை அரசு பெண் ஊழியர் பேசுவது காணொளியில் பதிவாகியுள்ளது. ஒரு நிமிடம் இது ரேஷன் கடையா அல்லது மீன் மார்கெட்டா என யோசிக்க வைக்கின்றது இந்த காணொளி.

ரேஷன் கடை பெண் ஊழியர், ”இந்த பொருளை நீ வாங்கி தான் ஆகனும்” என வற்புறுத்த, பொருள் வாங்க வந்த பெண் என்னிடம் காசு இல்லை எனக் கூற, நீ சொன்னா 1.5 லட்சம் ரூபாய் எவ கட்றது என மிகவும் அநாகரீகமாக பேசுகின்றார் அரசு பெண் ஊழியர்.

என்னமோ ரேஷன் கடையே இவருக்கு சொந்தம் போன்றும், அதில் உள்ள பொருட்களை இவர் முதல் போட்டு வாங்கி விற்பது போன்றும் அவரது பேச்சு அமைந்துள்ளது.

ரேஷன் கடையில் உள்ள பொருட்களும் , இவர் வாங்கும் ஊதியமும் வரிசையில் நிற்கும் பொதுமக்களின் வரிப் பணத்தில் இருந்து வாங்கப்பட்டது என்பதை மறந்து இவர் எஜமானி போன்றும் பொருள் வாங்க வந்தவர்கள் அடிமைகள் போன்று நடந்து கொள்வது காணொளியில் பதிவாகியுள்ளது.

”எல்லா ரேஷன் கடைகளில் இதே நிலை தான் உள்ளது, பொருட்கள் எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்பது கட்டாயமா அப்படி வாங்க முடியவில்லை எனில் இப்படி அநாகரீமாக முறையில் நடந்து கொள்ள அனுமதி உள்ளதா அதிகாரிகள் இது குறித்து உடன் ஆவண செய்ய வேண்டும்” என பலர் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ரேஷன் கடையில் இந்த சம்வம் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here