ஏழைகளின் கஷ்டத்தை அறியாமல் செயல்படும் மோடிக்கு ஜனாதிபதி தக்க பாடம் புகட்டியுள்ளார் – காங்கிரஸ் விமர்சனம்

ஏழைகளின் கஷ்டத்தை அறியாமல் செயல்படும் மோடிக்கு ஜனாதிபதி தக்க பாடம் புகட்டியுள்ளார் – காங்கிரஸ் விமர்சனம்

SHARE

ரூபாய் மதிப்பிழப்பு விவாகாரத்தில், ஏழைகளின் துயரத்தை அறியாமல் செயல்படும் பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சரியான பாடம் கற்பித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தால், ஏழைகள் சந்திக்கும் துயரங்களை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ரூபாய் நோட்டு விவகாரத்தில் சோம்பேறி குழந்தையான பிரதமருக்கு குடும்ப தலைவரான ஜனாதிபதி சரியான பாடம் புகட்டி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

m_id_471752_narendra_modi

ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பின் விளைவுகளை, பிரதமருக்கும், பாரதிய ஜனதா அரசுக்கும், குடியரசுத் தலைவர் எடுத்துரைத்திருப்பதாகவும், இனியாவது பிரதமர் பொறுப்புடன் செயல்ட வேண்டும் எனவும் சுர்ஜேவாலா அறிவுறுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY