Home India ஒரு பெண்ணிற்காக அடித்துக் கொண்ட மூன்று பேர், இறுதியில் 4 வது நபருடன் சென்ற பெண்

ஒரு பெண்ணிற்காக அடித்துக் கொண்ட மூன்று பேர், இறுதியில் 4 வது நபருடன் சென்ற பெண்

SHARE


கர்நாடக மாநிலம் பெங்களுரைவை சேர்ந்த சசிகலா என்ற பெண் மூர்த்தி என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் சசிகலாவிற்கு 2000 ஆம் அண்டு தாலி கட்டிய கணவர் ரங்கசாமி என்பவராவார். 2010 ல் ரங்கசாமியும் சசிகலாவும் பிரிந்துள்ளனர். பின்னர் ரமேஷ் குமார் என்பவருடன் சசிகலாவிற்கு பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்துள்ளார். பின்னர் 2015 ல் அவரையும் விட்டு பிரிந்து குமார் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். 6 மாதத்தில் அவரையும் கழட்டி விட்டு ஆரம்பத்தில் குறிப்பிட்ட மூர்த்தி என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார் சசிகலா.

மூர்த்திக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சசிகலா வேலை செய்யும் இடத்தில் உள்ள கேப் ட்ரைவருடன் சசிகலாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கேப் ட்ரைவர் ராஜு என்பவர் சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

ராஜு திருமணம் ஆகாதவார் , தற்போது இருக்கும் மூர்த்தி திருமணம் ஆனவர். எனவே ராஜுவுடன் சசிகலா பழக்கதை நெருக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

நேற்று முன் தினம் ராஜு சசிகலா இருவரும் பைக்கில் வந்ததை பார்த்த மூர்த்தி ஆத்திரடைந்து சசிகலாவிற்காக ராஜுவிடம் மூர்த்தி சண்டையிட்டுள்ளார்.

நீடாமங்கலா நெடுஞ்சாலையில் இந்த சண்டை நடப்பதை பார்த்த பொதுமக்கள் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க துவங்கியததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் போலிசார் வந்து சண்டையை நிறுத்தியுள்ளனர். 3 பேரையும் காவல் நிலையத்திற்கு போலிசார் அழைத்து சென்றுள்ளனர்.

அப்பொழுது சசகிலாவிடம் போலிசார் இருவரில் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகின்றீர்கள் எனக்கேட்டதற்கு , சசிகலா இருவரும் எனது நண்பர்கள் என்னை யார் சொந்தமாக்கிக் கொள்வது என்பதில் பொறாமைப்பட்டதால் இந்த சண்டை நடந்துள்ளது எனக் கூறிக் கொண்டிருக்கும் போது மற்றோரு நபர் பைக்கில் வர சசிகலா பைக்கில் வந்தவருடன் சென்றுவிட்டார்.

கர்நாடாகவாவில் நடைபெற்ற இந்த சம்பவம் வடிவேலு காமடியில் வந்த காட்சிகள் போன்று அமைந்திருந்தது.

1 பெண்ணிற்காக 3 ஆண்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here