Home Tamil Nadu பிரதீபா தனது குடும்பத்திற்கு எழுதிய உருக்கமான கடிதம் வெளியானது

பிரதீபா தனது குடும்பத்திற்கு எழுதிய உருக்கமான கடிதம் வெளியானது

SHARE


தற்கொலை செய்யும் முன் பிரதீபா தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. படிக்கும் போதே கண்கள் குளமாகின்றது. 2 வருடத்தில் பிரதீபா தான் பட்ட அவமானத்தையும் தன்னால் தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட கஷ்டத்தையும் வார்த்தைகளில் வடித்துள்ளது படிப்பவர்களை கண் கலங்க வைக்கின்றது.

அப்பாவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பிரதீபா வைத்திருந்தது அவரது கடிதத்தில் தெரிகின்றது. அப்பா நீ போன வருசம் எனக்கு அட்வைஸ் பன்னி தடுத்தீங்க ஆனால் இனிமேலும் ஒரு தோல்வியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது உங்களின் நம்பிக்கையை நான் பலாக்கி விட்டேன் இனி நான் எப்படி எனது டீச்சர் முகத்தில் விழிப்பேன் பள்ளிக்கு செல்வேன் போன வருசமே இந்த முடிவ நான் எடுத்திருந்தா இந்நேரம் நீங்க எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா மறந்துருப்பீங்க நீங்க புத்தி மதி சொன்ன நால 2 வருசமும் தோல்வியை சந்தித்து விட்டேன் என பிரதீபா உருக்கமாக எழுதியுள்ளார்.

நீட்டால் 10 வது மாடியில் இருந்து குதித்த 18 வயது மாணவி நேரடி காட்சிகள்

”என்னால தானப்பா நீ மத்தவங்க முன்னாடி 2 வருசமா தலைகுணிந்து வாழ்ந்த, நீ யாரு முன்னாடியும் இனிமேலும் தலைகுணிந்து நிக்கிறத நான் விரும்பலப்பா. நீ மத்தவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழனும் என்பது தான்ப்பா என்னோட ஆசை ஆனால் என்னால அதை செய்ய முடியலப்பா சாரிப்பா…

என் குடும்ப நீங்க எல்லோரும் எனக்கு கிடைத்த வரம்பா ஆனா நான் உங்களுக்கு கிடைத்த சாபம்பா எனக்கு இனிமேலும் தோல்விய தாங்குற சக்தி இல்லப்பா எனக்கு 2 வருசமா அந்த சக்திய கொடுத்தது நீ தான்பா ஆனா இதுக்கு மேலயும் நான் உனக்கு பாரமா இருக்க விரும்பலப்பா. 2 வருசத்துக்கு முன்னாடி எடுத்த முடிவ நான் இப்ப செய்யப் போறேன் பா ஏன்னா உங்க நம்பிக்கையை நான் இழந்துட்டேன் பா…


நான் சாகப்பேறன் பா ஐ அம் சாரி பா ஐ லவ்யு பா..

நம்ப குடும்பத்த எனக்கு ரொம்ப பிடிக்கும் பா உங்க எல்லோரோடையும் ரொம்ப நாள் வாழனும் ன்னு ஆசையா இருக்குப்பா ஆனா எனக்கு அந்த தகுதி இப்ப இல்ல… இந்த முடிவு பலருக்கு கோழை தனமா தெரியலாம் ஆனா அடுத்தவங்க நம்ம மேல வைச்சுருக்கு நம்பிக்கைய நாமலே அழிச்சுட்டு வாழ்கின்ற வாழ்கை ரொம்ப மோசம்…

எனக்கு ஒரே ஒரு வருத்தம்பா என்னால உங்களுக்கு எந்த சந்தோசத்தையும் கொடுக்க முடியலப்பா அதோட என்னால இருந்த சந்தோசத்தையும் இழந்துட்டீங்க..

அப்பா எனக்கு நீங்க தைரியும் சொன்னதுக்கு அப்புறமும் இந்த முடிவ நான் எடுக்குறது தப்பு தான் ஆனா என்னால தோல்விய தாங்க முடியல உங்க எல்லாரையும் விட்டுட்டு போகனும் ன்னு நினைக்கும் போது ரொம்ப வலிக்குது ஆனா அதை விட அதிகமான வலியை இந்த தோல்வி தந்து விட்டது…

என்னைய மன்னிருச்சுருப்பா மன்னிச்சுரும்மா மன்னிச்சுருக்கா மன்னிருச்சுன்னா உங்க எல்லாரையும் மிஸ் பன்றேன்..”

என முடித்துள்ளார் பிரதீபா! பிரதீபா வீட்டில் அவரை அம்மு என் அழைப்பார்கள் போல் உங்கள் அம்மு என முடித்துள்ளார் பிரதீபா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here