Home Tamil Nadu எங்க அப்பாவையும் காணோம் ஊட்டிக்கு போன எங்க அம்மாவையும் காணோம் பவர் ஸ்டார் மகள் பேட்டி

எங்க அப்பாவையும் காணோம் ஊட்டிக்கு போன எங்க அம்மாவையும் காணோம் பவர் ஸ்டார் மகள் பேட்டி

SHARE

கடந்த 2 நாட்களாக காமடி நடிகர் பவர் ஸ்டாரை காணவில்லை என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அவர் கடத்தப்பட்டுவிட்டார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் காணாமல் போனதன் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. பவர் ஸ்டாரின் மகள் வைஷ்னவி இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து , காமடி நடிகர் காணாமல் போன 5 ஆம் தேதியிலிருந்து இன்று வரை என்ன நடந்தத என்பதை விளக்கியுள்ளார்.

”5 ஆம் தேதி அப்பா காணமா போயிட்டாருன்னு ட்ரைவர் சொன்னாரு, பிறகு அப்பா அம்மாவ ஒரு இடத்துக்கு வர சொன்னாரு. அம்மா அங்க போனாங்க. அப்பாவ 2 பேரு பிடிச்சு வைச்சுருந்திருக்காங்க. நாங்க உங்கள பாத்துட்டோம் சொத்து விசயமாக இவர் கிட்ட ஒரு வாய்ஸ் ரிகார்ட் வாங்கிட்டு விட்டுர்றோம் நீங்க போங்க என அம்மாவிடம் சொல்லி அவர்கள் அனுப்பியுள்ளனர். தங்களை அவர்கள் போலிஸ் எனக் கூறியுள்ளனர்.

ஆனால் சொன்னபடி அப்பா வரவில்லை. மீண்டும் அவர்கள் அம்மாவிற்கு போன் செய்தார்கள். உங்க புருசன் பேச்சு சரியில்ல இந்த ஆளு ஏமாத்துற மாறி தெரியுது. இவர ஊட்டிக் தூக்கிட்டு போய் அங்க வைச்சு சொத்த எழுதி வாங்கிக்கிறோம் நீங்களும் வாங்க என எனது அம்மாவிற்கு விமான டிக்கட் எடுத்து கொடுத்தாங்க.

எங்க அம்மாவும் ஊட்டிக்கு போனாங்க. அங்க அம்மாவோட செல்போன வாங்கி வைச்சுகிட்டாங்க. ஊட்டிக்கு போய் அம்மா ஒரு முறை போன் பன்னாங்க அதுக்கு அப்புறம் நான் போன் பன்னா அம்மா அப்பா ரெண்டு பேரு போனும் சுவிச் ஆஃப் ன்னு வருது. முதல்ல அப்பாவ காணோம் இப்ப அம்மாவையும் காணோம். அப்பா நான் ஒரு முறை நான் நல்லா இருக்கேன்னு சொன்னாரு.

எங்க அப்பா மேல ஒரு (மோசடி) வழக்கு பேங்களுரில் நடக்கு அதுக்கு எங்க அப்பா செட்டில் பன்றேன்னு சொல்லிட்டாரு அவகாசம் கேட்டிருந்தார். அவங்க தான் இப்ப கடித்துட்டு போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்”

இவ்வாறு மகள் பேட்டி அளித்துள்ளார்.

இந்த காமடி நடிகர் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளது. இந்த வழக்கில் இவர் சிறைக்கும் சென்று வந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட யாரோ சினிமாவில் வருவது போன்று இவரை கடத்தி தங்களுக்கு சேர வேண்டிய பணத்திற்கு பதிலாக சொத்தை எழுதி வாங்க அழைத்து சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here