Home Tamil Nadu மயிலாடுதுறை விபரீத முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த சோகம் வீடியோ

மயிலாடுதுறை விபரீத முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த சோகம் வீடியோ

SHARE


பூம்புகார் கடலில் எச்சரிக்கையும் மீறி விபரீத விளையாட்டில் இறங்கிய 3 கல்லூரி மாணவிகள் இன்று மதியம் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனம் மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்த 7 கல்லூரி மாணவிகள் இன்று பூம்புகார் கடலுக்கு சென்றுள்ளனர். இதில் மஞ்சு, விவேகா, சிவப்பிரியா என்ற இரண்டாம் மற்றும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு விபரீத ஆசை வந்துள்ளது. காவிரியும் கடலும் சந்திக்கும் இடத்தில் குளிக்க வேண்டும் என எண்ணி தடை செய்யப்பட்ட பகுதியில் குளிக்க இறங்கியுள்ளனர்.

இதில் மாணவிகள் 3 பேரும் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர். கரையில் இருந்த மற்ற மாணவிகளில் ஸ்வேதா ஹன்சிகா பேகம் என்ற இரண்டு மாணவிகள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்த போது அவர்களும் சிக்கியுள்ளனர். இதை பார்த்த மற்ற மாணவிகள் அலறியுள்ளனர். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டதும் மீனவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் மஞ்சு, விவேகா, சிவப்பிரியா ஆகிய 3 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

காப்பாற்ற சென்ற மாணவிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கல்லூரி பையுடன் மாணவிகள் கடலுக்கு வந்துள்ளனர். கடற்கரையில் உயிரிழந்தவர்களின் கல்லூரி பைகள் மீட்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் விபரீத முயற்சியில் ஈடுபட்டு 3 மாணவிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

”காவிரியும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் சேறுடன் கூடிய புதை மணல் அதிகம் இருப்பதால் இது ஆபத்தான பகுதி இங்கு மேலே உள்ள படத்தில் உள்ளவர்கள் குளித்து இறந்துள்ளார்கள் இங்கே யாரும் குளிக்க வேண்டாம்” என காவல்துறை எச்சிரிக்கை பலகை வைத்திருந்தும். அதை மாணவிகள் கண்டு கொள்ளாமல் குளித்து உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் குளிக்க சென்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள காவல்துறையின் அறிவிப்பு

படிக்க அனுப்பி வைத்த மாணவிகளின் குடும்பம் பிள்ளைகளை பறிகொடுத்து சோகத்தில் மூழ்கியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் சடலங்களை கை பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here