Home Tamil Nadu பொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ

பொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ

SHARE


பொள்ளாச்சி சம்பத்தில் ஈடுபட்டவர்களுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என தமிழகமே எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் திருநாவுக்கரசு உள்ளிட்ட அந்த குற்றவாளிகளை , ஒரு வீட்டின் வாசலில் வைத்து வாலிபர்கள் சேர்ந்து தாக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

முதன் முதலில் அந்த குற்றவாளிகள் இளைஞர்களால் பிடிபட்ட போது எடுக்கப்பட்ட காணொளி போன்று தெரிகின்றது.

”எத்தன பெண்களோட வாழ்கையடா நாசம் பன்னிருக்கீங்க” என கையில் வீடியோ உள்ள அந்த செல்போனை வைத்துக் கொண்டு இளைஞர்கள் இருவரையும் சரமாரியாக தாக்குகின்றனர்.

”மச்சான் அவன் கால அடிடா இனி அவ நடக்கவே கூடாது” எனக் கூறி ஆத்திரம் திர அவர்கள் தாக்கப்படுகின்றனர்.

”அருளு என்னைய விட்டுர்ரா வலி தாங்க முடியல..” என திருநாவுக்கரசு கதறுவது இந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது, அந்த காணொளியில் இளம் பெண்ணின் குரலை ஞாபகப்படுத்துகின்றது.

”பெண்கள நாசம் பன்னிட்டு அத ஏண்டா வீடியோ எடுத்தீங்க” என சொல்லி சொல்லி ஒருவர் தாக்குகின்றார். இறுதியில் ஒருவன் அடி தாங்க முடியாமல் மயங்கி விழுகின்றான்.

இது முன்னர் நடந்த சம்பவம், இதற்கு பிறகு தான் போலிசார் இவர்களை செய்து தற்போது குண்டாசில் சிறையில் அடைத்துள்ளனர்.

சம்பவத்தை கேள்விபட்டு தமிழகமே உரைந்து நிற்கும் வேலையில் இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here