Home Tamil Nadu எப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்

எப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்

SHARE


சினிமா பட பாணியில் கல்லூரிி மாணவிகள் . இளம் பெண்கள் , திருமணம் ஆன பெண்கள் என பலரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து பணம் பறித்து பொள்ளாச்சியில் கும்பல் ஒன்று உல்லாசம் அனுபவித்துள்ள சம்பவம் தமிழக மக்களை அதிர வைத்து மாநிலத்தையே உளுக்கியுள்ளது.

இதில் கோவையை சேர்ந்த பிஇ பொறியியல் படித்த சபரிநாதன்(25) , திருநாவுக்கரசு , சதீஷ் , வசந்த குமார் 24 , செந்தில் , பாபு உள்ளிட்ட இளைஞர்களை காவல்துறை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இவர்களின் செல்போனில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யும் 100 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கை பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் ஒரு வீடியோவை பிரபல நக்கீரன் பத்திரக்கை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆடையை கழட்ட சொல்லி அடித்து துன்புறுத்தி இளம் பெண் ஒருவரை கதற கதற இரண்டு 3 பேர் சேர்ந்து சீரழித்து அதை படம் பிடிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

இன்றைய பெண்கள் சதி வலையில் சிக்க, இன்றைய நவீன சமூக வலைதள தொடர்புகளே பிரதான காரணம் ஆகி வருகின்றது என்பதையும் இந்த சம்பவத்தின் பின்னணி உணர்த்துகின்றது.

பார்ப்பதற்கு டிப்டாப்பாக ஹீரோக்கள் போன்று இருக்கும் இந்த கும்பல், சமூக வலைதளம் மூலம் பெண்களுடன் பழகி அவர்களின் நம்பிக்கையை பெற்று பின்னர் காரில் அழைத்து சென்று சீரழிப்பதோடு அதை படம் பிடித்து, பணக்கார பெண்களாக இருந்தால் அந்த வீடியோ வைத்து மிரட்டி பணம் பறிப்பதும், ஏழை பெண்ணாக இருந்தால் அந்த வீடியோ காட்டி தொடர்ந்து தங்களது ஆசைக்கும் மற்றவர்களின் ஆசைககும் இணைங்க வைப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

திருநாவுக்கரசு

இப்படிப்பட்ட கும்பல் தமிழகத்தில் எப்படி சுதந்திரமாக செயல்பட்ட வந்துள்ளது என்ற பெரும் கேள்விக்கு யார் பதில் சொல்வது எனத் தெரியவில்லை. நக்கீரன் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளை பார்க்கும் அனைவருக்கும் ரத்தம் கொதிக்காமல் இருக்காது.

இந்த கும்பலிடம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த கும்பல் பற்றிய தகவல் தற்போது வெளியே தெரியவந்துள்ளது.

புகார் அளித்த பெண்ணின் சகோதரரை இந்த கும்பலின் ஆட்கள் தாக்கி மிரட்டியுள்ளனர். தாக்கியவர்களை போலிசார் கைது செய்துள்ளனர். எனினும் அதில் ஒருவர் ஜாமினில் வெளியே வந்துள்ளது குறிப்பிடதக்கது.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அனைவரும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இவர்கள் பெண்களை எப்படி தங்கள் வலையில் சிக்க வைக்கின்றார்கள் என்ற வீடியோ ஆதாரம் ஒன்று சமூக வலைதளத்தில் 10 நாட்களுக்கு முன்னரே வெளியாகியுள்ளது. மேலும் இந்த கும்பலே பெண்களை தாங்கள் எவ்வாறு சீரழித்தோம் என்பதை விளக்கி ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கும் வீடியோவும் 10 நாட்களுக்கு முன்னரே வெளியாகியுள்ளது.

எனினும் இந்த காணொளிகள் பெரிய அளவில் ஊடக கவனத்தை பெறவில்லை. சமூக வலைதளத்தில் வெளியான அந்த காணொளி இதில் இடம் பெற்றுள்ளது.

இந்த கும்பலின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்ற இவன் , ஒரு இளம் பெண்ணை தனக்கு அருகில் நிறுத்தி வைத்துக் கொண்டு ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்கிறான்.

அதில் ”தனக்கு தாய் பாசம் அதிகம் இருப்பது போன்றும் , கடவுள் பக்தி அதிகம் இருப்பது போன்றும் , பெரிய தொழில் செய்வது போன்று தான் ஒரு அக்மார்க் நல்லவன் போன்றும் அந்த பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு பிறரிடம் பேசுகின்றான்.

அதாவது பெண் மனதில் தான் ஒரு நல்லவன் என ரிஜிஸ்டர் ஆகி பின்னர் வலையில் சிக்க வைக்க இவன் கையாயுண்டுள்ள யுக்தி இது.

பல பெண்களின் வாழ்கயை சீரழித்துள்ள இவன் அதை எப்படி செய்தோம் என்பதை அவனே விளக்கும் வீடியோவும் இதில் இடம் பெற்றுள்ளது.

பல பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களது செல்போனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கடும் தண்டவை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் அதே வேலையில் இன்றைய பெண்கள் இதில் இருந்து பாடம் படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது. ஆன்லைன் பழக்கம், காதல் பழக்கம் பெண்களின் வாழ்கயை எப்படி சீரழித்துவிடும் என்பதையும் உணர்த்துகின்றது இந்த சம்பவம்.

பெண்கள் சமூக வலைதளம் மற்றும் ஆன்லைன் தொடர்பு, காதல் போன்றவற்றில் பெண்கள் விழிப்புபோடு இருக்கும் அவசியத்தையும் இந்த சம்பவம் உணர்த்துகின்றது. .


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here