Home Tamil Nadu புதிய சர்ச்சை வைரலாகும் காடுவெட்டி குரு மனைவி , மருமகன் மனோஜ் போன் ஆடியோ

புதிய சர்ச்சை வைரலாகும் காடுவெட்டி குரு மனைவி , மருமகன் மனோஜ் போன் ஆடியோ

SHARE

காடுவெட்டி குரு மரணத்தை தொடர்ந்து அவரது கட்சி மற்றும் அவரது குடும்பத்தினருக்கிடையே தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்து வருகின்றது. சமீபத்தில் காடுவெட்டி குரு மகளின் திருமணம் நடைபெற்றது. காடுவெட்டி குருவின் தங்கை மகன் மனோஜ் காடுவெட்டி குருவின் மகளை திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் காடுவெட்டி குருவின் மனைவி கலந்து கொள்ளவில்லை.

என் தாயின் உயிருக்கு ஆபத்து என காடுவெட்டி குருவின் மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டு அது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் தங்கை மகன் மனோஜ் மற்றும் காடுவெட்டி குரு வின் மனைவி இருவரும் பேசுவது போன்ற ஆடியோ ஒன்றை தற்போது சமூகு வலைதளத்தில் வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனோஜ் என்பர் தான் சமீபத்தில் காடுவெட்டி குருவின் மகளை திருமணம் முடித்தவர். இந்த திருமணத்தில் தான் காடுவெட்டி குருவின் மனைவி கலந்து கொள்ளவில்லை.

தற்போது மருமகனும் (காடுவெட்டி குரு தங்கை மகன்) மாமியாரும் (காடுவெட்டி குரு மனைவி) பேசும் ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

இதில் ”அய்யா தான் வெறும் பேப்பர்ல கையெழுத்து வாங்குனாங்க” என காடுவெட்டி குருவின் மனைவி பேசுவது போன்று ஆடியோ இடம் பெற்றுள்ளது.

”மாமி நான் எப்ப மாமி உங்கள் கொலை பன்னுவேன்னு சொன்னேன் நீங்க தான் புகார் எழுதி கொடுத்துருக்கீங்க சொல்றாங்க” என மனோஜ் கேட்க நான் அப்படி எழுதலயே வெறும் 2 3 பேப்பர்ல தான் எங்கிட்ட கையெழுதது வாங்கினார்கள் என உரையாடல் செல்கின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here