பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த அமைச்சரை நிறுத்தி கேள்வி கேட்டு புகார் கூறிய பெண் , கோயம்பேட்டில்...

பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த அமைச்சரை நிறுத்தி கேள்வி கேட்டு புகார் கூறிய பெண் , கோயம்பேட்டில் பரபரப்பு

SHARE

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் பொது திடீர் என அஙகு வந்த இளம் பெண், போலிஸ் தன்னை ஹராஸ் செய்தது என புகார் கூறியதும், அமைச்சர் என்ன செய்வது என தெரியாமல் பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு கிளம்பினார்.

பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த தன்னை போலிஸ் லத்தியால் அடித்து ஹராஸ் செய்ததாக அந்த பெண் புகார் கூறியுள்ளார்.

எழுந்த சென்ற அமைச்சரின் முகத்தில் கோபத்தை காண முடிகின்றது. ஒரு கட்டத்தில் கோபபட்டு ”போலிஸ் ஸ்டேஷசன்ல போய் கம்லய்ண்ட் கொடத்தானே நடவடிக்கை எடுப்பாங்க என்கின்றார்.

போலிஸ் மேல போலிஸ் ஸ்டேசன்ல புகார் கொடுத்தா எடுப்பாங்களா இல்லை அப்படி பாதுகாப்பாக ஒரு பெண்ணால் புகார் கொடுத்தான் முடியுமா என்றனர் அங்கிருந்தவர்கள்.

பத்திரிக்கைக்கு அந்த பெண் பேட்டி கொடுக்க வரும் பொது அமைச்சரின் ஆட்களும் போலிசும் அந்த பெண்ணை இழுத்து செல்ல முயலுக்கின்றனர். அனைத்தும் பத்திரிக்கை கேமராவில் பதிவானதால் அந்த பெண் கத்தவும் அவர்கள் பின் வாங்குகின்றார்கள்.

பெண்கள் மீது போலிசாரின் அத்துமறீல்கள் அதிகரித்துள்ளதை இந்த சம்பவம் உணர்த்துகின்றது.

இந்த சம்பவத்தால் கோயம்பேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சரிடம் கூறிய பிறகு காவல் நிலையத்திற்கு சென்ற இந்த பெண்ணை போலிசார் பல கோணங்களில் அவரின் விருப்பம் இன்றி புகைப்படம் பிடித்துள்ளனர். மேலும் அவரது புகாரை கிடப்பில் போட்டுள்ளதாக புகார் அளிக்கப் போ அந்த பெண் தெரிவித்துள்ளார்

.

NO COMMENTS

LEAVE A REPLY