Home Tamil Nadu சிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்

சிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்

SHARE


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 38 வயது பெட்ரோல் பங்க் ஊழியரை பெட்ரோல் போட வந்த சிறுவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி பணப் பையை வெட்டி எடுத்து சென்றுள்ள துணிகர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெட்ரேல் பங்கில் பணியாற்றுபவர் சிவசங்கரன் (38). நேற்று இரவு இவர் பணியில் இருந்த போது ஒரு பைக்கில் 3 பேர் பெட்ரோல் போட வருகின்றனர். பைக்கில் இரண்டு பேர் அமர்ந்திருக்க சிறு வயதுடைய ஒருவன் கீழே இறங்கி சிவசங்கரன் அருகே நின்று கொள்கின்றான். சிவசங்கரன் அந்த பைக்கிற்கு பெட்ரோல் போட அந்த சிறுவயது பையன் சிவசங்கரனிடமிருந்த பணப் பையை நன்கு நோட்டமிடுகின்றான்.

பேட்ரோல் போட்டு முடிந்ததும் சிவசங்கரனிடமிருந்து 3 பேரும் சில்லரையை வாங்கிக் கொள்கின்றனர். கீழே நின்ற சிறுவயது பையனும் பைக்கில் ஏறி பைக்கை ஸ்டார்ட் செய்து தயாராக நிற்கின்றனர். திடீர் என சிவசங்கரனிடமிருந்து பணப் பையை பறிக்க முயல்கின்றான் அந்த சிறுவது பையன்.

சிவசங்கரன் பையை கொடுக்க மறுத்ததும் உடனே மறைத்து வைத்திருந்த பெரிய அரிவாளை வெளியே எடுத்து அந்த சிறுவன் சிவசங்கரனை சரமாரியாக முகம் கழுத்து கால் என எல்லா இடத்திலும் வெட்டுகின்றான்.

வெட்டை வாங்கிக் கொண்டும் அஞ்சாமல் சிவசங்கரன் பையை தொடர்ச்சியாக கொடுக்க மறுக்கின்றார். சிவசங்கரன் பையை கொடுக்க மறுக்க மறுக்க சிறுவன் அவரை பல இடங்களில் வெட்டுகின்றான். நிலை தடுமாறும் நிலையிலும் சிவசங்கரன் பையை விடவில்லை.

இருதியாக அவரிடமிருந்த பையை வெட்டி எடுக்கின்றான் அந்த சிறுவன். பலத்த காயத்துடன் நிலைகுலைந்து போனார் சிவசங்கரன். பையை பறித்த பிறகும் சிவசங்கரன் பையை கொடுக்க மறுத்ததால் அவரை மேலும் சரமாரியாக வெட்டுகின்றான் அந்த கொடூரன்.

பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி விடுகின்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சிவசங்கரனுக்கு தற்போது ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கடலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 8 பேரை கைது செய்து விசாரனை நடத்தினர். இதில் சமபந்தப்பட்ட குற்றவாளிகளை புசத்திரம் போலிசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பண பையை மீட்டுள்ளனர்.

பணப் பையுடன் குற்றவாளிகளை விரைந்து செயல்பட்டு பிடித்த புதுசத்திரம் போலிசார்

சிவசங்கரன் பையில் 5 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு இந்த துணிகரத்தை நடத்தியுள்ளனர் இந்த கொடூரன்கள்.

பிடிபட்ட 3 பேர்

”ஒரு சிறுவன் இரக்கமின்று ஒருவரை பணத்திற்காக சரமாரியாக வெட்டும் காட்சிகள் காண்பவரை கொந்தளிக்க வைக்கின்றது வயதை காரணம் காட்டி தப்பி விடலாம் என்ற தைரியத்தில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் இவர்களை தடுக்க என்ன வழி ? அப்படியே கைது செய்யப்பட்டாலும் ஒரு சில மாதங்களில் வெளியே வந்து அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கி விடுகின்றனர், ஆனால் பாதிக்கப்பட்ட இவர்களோ வாழ் நாள் முழுவதும் கை, கால்களை, வருமானத்தை இழந்து தவிக்க வேண்டும் ? இதற்கு என்ன தீர்வு என சமூக வலைதளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here