Home Tamil Nadu ஜோசியக்காரை நடு ரோட்டில் வெட்டி சாய்த்த மர்ம நபர் ஏன் செய்தேன் துண்டு பிரசுரம்

ஜோசியக்காரை நடு ரோட்டில் வெட்டி சாய்த்த மர்ம நபர் ஏன் செய்தேன் துண்டு பிரசுரம்

SHARE


இன்று மதியம் திருப்புரில் ஜோசியக்காரரை பட்டப்படகலில் நடுரோட்டில் பைக்கில் வந்த மர்ம நபர் வெட்டி சாய்த்து விட்டு தான் ஏன் இவரை கொன்றேன் என்பதை துண்டு பிரசுரமாக அச்சடித்து அங்குள்ள பகுதியில் விநியோகம் செய்து விட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்புர் குமரன் சாலை பகுதியில் கிளி ஜோசியம் பார்த்துர் வந்துள்ளார் ரமமேஷ் அந்த பகுதியில் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கின்றார். திடீர் என அவருக்கு பின்னால் பைக்கில் இருந்து ஒரு நபர் தலையைில் ஹெல்மட் அணிந்தவாறு இறங்கி வந்து சடால் என ரமேஷ் தலையில் வெட்டுகின்றார். ஒரே வெட்டில் ஜோசியக்காரர் ரமேஷ் சாலையில் சரிந்தார்.

ஆத்திரம் தீர அந்த நபர் மேலும் அவரை சரமாரியாக வெட்ட சாலையில் சென்ற பொதுமக்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்று சம்பவத்தை வேடிக்கை பார்த்தனர். தனது ஆத்திரம் தீர வெட்டிய பிறகு சாவகாசமாக தான் வைத்திருந்த துண்டு பிரசுரத்தை அந்த மர்ம நபர் அங்கு விநியோம் செய்து விட்டு சென்றுள்ளார். ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த துண்டு பிரசுரத்தில் , இந்த ஜோசியக்காரர் இந்த பகுதியில் உள்ள பூங்காவிற்கு வரும் பல பெண்களை வசியம் செய்து தனது வலைக்குள் கொண்டு தவறாக பயன்படுத்துவதாகவும் இதில் பிரியா என்ற பெண் மாட்டிக் கொண்டதாகவும் அந்த பிரியாவும் இந்த மர்ம நபரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் பிரியாவை மீட்பதற்காக இதை செய்ததாகவும் அந்த மர்ம நபர் துண்டு பிரசுரத்தில் கூறியுள்ளார்.

மர்ம நபரின் துண்டு பிரசுரம்
மர்ம நபரின் துண்டு பிரசுரம்

திருப்புர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகி அதன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ப்ரியா என்ற அந்த பெண் யார் , இந்த மர்ம நபர் யார் என போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் ரமேசின் உறவினர்களிடமும் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

பிரியா கோயம் பாளையம் ராஜா நகரில் வசிப்பவர் எனவும் 2.7 வருடமாக பிரியா ஜோசியக்காரர் பிடியில் மாட்டிக் கொண்டுள்ளதாக பிரியாவிற்கு தனக்கும் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக பழக்கம் இருந்து வருவதாகவும் குழந்தையும் இருப்பதாகவும் அந்த மர்ம நபர் எழுதியுள்ளார்.

மேலும் ஜோசியக்காரர் ரமேசிடம் பிரியா சிக்கியது தொடர்பாக அனுபர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பிரியாவும் இவரும் தற்போது பிரிந்து இருப்பதாகவும் அந்த மர்ம நபர் அதில் எழுதியுள்ளார்.

பெண்களை வசியம் செய்யும் இந்த ஜோசியக்காரர் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் அவரிடம் சிக்கியுள்ள பெண்களை மீட்க வேண்டும் எனவும் அவர் அதில் எழுதியுள்ளார்.

இந்த செய்திக்கு இது சம்பந்தம் இல்லை என்றாலும் இந்த சம்பவம் மூட நம்பிக்கை வைப்பர்களுக்கு ஒரு சில கேள்விகளை எழுப்புவதை நாம் மறந்து விட முடியாது.

தனக்கு பின்னால் தன்னை ஒருவன் கொலை செய்ய வருகின்றான் என்பதை கூட கணிக்க முடியாத கிளி ஜோசியக்காரருக்கு எப்படி நமது வாழ்கையில் நாளை என்ன நடக்கு போகின்றது என்பதை கூற முடியும் என்பதை இந்த சம்பவம் புரிய வைக்கின்றது.சாலையில் ஜோசிய வியாரம் செய்வது போதாது என்று டீவிகளில் ராசிபலன் என அந்த ராசி இந்த ராசி அது நடக்கும் இது நடக்கும் என டிஜிடலிலும் ஜோசிய வியாரம் வெகு ஜோராக நடக்கின்றது. ஒருவரின் வாழ்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது அது ஜோசிக்காரர் உட்பட அதற்கு இந்த சிசிடிவி காட்சி ஒரு சான்று!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here