Home Tamil Nadu திமுக சிலை திறப்பு நிகழ்ச்சியில் பெண் காவல்துறை அதிகாரியிடம் பெண் பிரமுகர் வாக்கு வாதம்

திமுக சிலை திறப்பு நிகழ்ச்சியில் பெண் காவல்துறை அதிகாரியிடம் பெண் பிரமுகர் வாக்கு வாதம்

SHARE

நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பெண் ஒருவர் காவல்துறையினரை தரக்குறைவாக பேசும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பெண் உதவி ஆய்வாளரை பார்த்து போடி போறம்போக்கு.. நீ ஒரு பொம்பளயா என அந்த பெண் கேட்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் சோனியா காந்தி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலிசார் நிறுத்தப்பட்டிருந்தனர். பெருந்தலைவர்களின் பாதுகாப்பு கருதி தாமதமாக வருபவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது பாதுகாப்பு ப்ரோட்டோகால் ஆகும்.

இந்த பெண் நிகழ்ச்சிக்கு தாமதாக வந்ததாக கூறப்படுகின்றது. பேரிகாட் தடுப்பு போடப்பட்டிருந்துள்ளது. தன்னை உள்ளே விடுமாறு இவர் கூறியுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் தாங்கள் தாமதாக வந்துள்ளீர்கள் பாதுகாப்பு கருதி தற்போது உள்ள அனுமதிக்க முடியாது அனுமதித்தாலும் சோனியா காந்தி அவர்களின் பாதுகாவலர்கள் வெளியே அனுப்பி விடுவார்கள் எனக் கூறியதாக கூறப்படுகின்றது.

இதில் அந்த பெண் ஆத்திரமாகி காவல்துறை அதிகாரி என்றும் பாராமல் பெண் உதவி ஆய்வாளரை பார்த்து வாடி போடி என பேசுகின்றார். ”ஏ ச்சி போடி பொறம்போக்கு பொம்பளயா நீ உன்ன மாறி எவ்வோ பேற பாத்துருக்கோம்” என திட்ட ஆரம்பிக்கின்றார். ஆண் காவல்துறை அதிகாரிகள் அவரை சமாதனப்படுத்தியும் அவர் விடுவதாக இல்லை.

”வீடியோ எடுத்துக்கிட்டு இருக்காங்கம்மா இப்படில்லாம் பேசாதீங்க” என காவல்துறையினர் சாமாதானப்படுத்தியும் அந்த பெண் விடுவதாக தெரியவில்லை. கட்சியின் தொண்டர் அணியினரை பார்த்து நீங்கல்லாம் எதுக்கு இருக்கீங்க நமக்கு பாதுகாப்பு கொடுக்க தான் நீங்க இருக்கீங்க என்ன பன்னிகிட்டு இருக்கீங்க என கேட்டு கட்சி காரர்களை பார்த்து சத்தம் போடுகின்றார்.

”எங்க தலைவருக்கு ப்ரோடக்சன் கொடுக்க முடியல இவ இங்க வந்து பெரிய பு.. மாறி பேசுறா..” என தொடர்ந்து அந்த பெண் பேசிகின்றார்.

காவல்துறையினர் ”சரிம்மா நீங்க கிளம்புங்க பிரச்சன பன்னாதீங்க” எனக் கூறியும் ”யார் கிளம்பனும் நான் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வந்துருக்கேன் அவங்க தான் முதல்ல தேவ இல்லாம பேசுனாங்க.. காந்தி என்னா சொல்லிருக்காரு தெரியுமா காவல்துறை தன் கடமையை செய்ய வேண்டும் மக்களுக்கு நன்மை செய்யத் தான் காவல்துறை என்று காந்தி அடிகளே சொல்லிருக்காரு உங்களுக்கு தெரியாதா” என திடீர் என சுத்த தமிழில் பேசினார் அந்த பெண்.

இப்படியே போய் கொண்டிருக்கும் போது திடீர் என ஒரு வார்த்தையை கூறினார் அந்த பெண். இந்த அராஜகமெல்லாம் சசிகலா ஜெயலலிதாவோட போயிடுச்சு இந்த வேலல்லாம் எங்கிட்ட வேணாம் என்றார் அந்த பெண்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பெண் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகி எனக் கூறப்படுகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here