Home World செல்ஃபி மோகத்தால் உயிரை இழந்த பெண், 27 வது மாடி பால்கனியிலிந்து செல்ஃபி எடுத்த பெண்...

செல்ஃபி மோகத்தால் உயிரை இழந்த பெண், 27 வது மாடி பால்கனியிலிந்து செல்ஃபி எடுத்த பெண் பலி

SHARE

27 வது மாடியின் பால்கனியில் இருந்து செல்ஃபி எடுத்த பெண் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் போது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதை தற்செயலாக ஒருவர் செல்போனில் படம் பிடித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

பனாமாவில் உள்ள El Cangrejo என்ற இடத்தில் அமைந்துள்ள Luxor Tower பில்டிங்கில் சான்ட்ரா என்ற போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 27 வயது பெண் 27 வது மாடியின் பால்கனியில் இருந்து செல்பி எடுக்கும் போது காற்று வேகமாக அடித்ததால் பேலன்ஸ் தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் ஒரு ஆசிரியர் எனவும் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பனாமா ஃபயர் சர்வீஸ் அறிவிப்பு ஒன்றை நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ளது.

”Don’t risk your life for a selfie. It’s more important to lose a minute in life than your life in a minute”

”செல்ஃபிக்காக உங்கள் உயிரை பணயம் வைக்காதீர்கள், உங்கள் வாழ்வில் ஒரு மிடத்தை இழப்பதை விட ஒரு நிமிடத்தில் உங்கள் வாழ்வையே இழப்பதும் மிகவும் முக்கியம்” என நாட்டு மக்களுக்கு பனாமா அறிவித்துள்ளது.

உயிரிழந்த பெண்

அந்த பெண் கீழே விரும் போது செல்ஃபி ஸ்டிக்கை பிடித்துக் கொண்டே விழுந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அவர் தரையில் விழுந்த போது செல்ஃபி ஸ்டிக்கும் உடன் இருந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்ஃபி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருது பலரின் உயிரை பறிக்க காரணமாகி வருகின்றது. கடந்த 5 ஆண்டில் இதுவரை செல்ஃபி மோகத்தால் 259 பேர் தனது உயிரை இழந்துள்ளதாக சமீபத்தில் டெல்லியில் வெளியான ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி அபாயகரமான முறையில் செல்ஃபி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் இல்லை எனில் நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதையே இது போன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றது.

நம்மை தள்ளி விடும் அளவிற்கு காற்று அடிக்கும் என அந்த பெண் எதிர் பார்த்திருக்க மாட்டார் ஆனால் அது நடந்து விட்டது. பால்கனி நுனியில் இருந்து செல்பி எடுத்து போடவில்லை எனில் நம் வாழ்கையில் என்ன நஷ்டம் வந்து விடப் போகின்றது. 100 , 200 லைக்கிற்கு ஆசைப்பட்டதால் தற்போது விலை மதிப்பற்ற உயிரை இழந்துள்ளார். இதனால் 2 குழந்தைகள் தன் தாயை இழந்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here