Home Tamil Nadu ”நான் ஆண்டி இந்தியன் தான்…” அரசியல் கலந்த நையாண்டி பேட்டியில் பா ரஞ்சித் , வைரலாகும்...

”நான் ஆண்டி இந்தியன் தான்…” அரசியல் கலந்த நையாண்டி பேட்டியில் பா ரஞ்சித் , வைரலாகும் வீடியோ

SHARE

காலா பட விவகாரத்தில் விமர்சனங்களை எதிர் கொண்ட பா ரஞ்சித் ”நான் ஒரு ஆண்டி இந்தியன் தான்” என அரசியல் கலந்த நையாண்டி பேட்டியில் கூறியுள்ள காணொளி தற்போத சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

பிரபல எஃப்எம் நடத்திய அரசியல் கலந்த நையாண்டி பேட்டியில் பட்டும் படாமலும் தற்போது உள்ள பல அரசியல் விவகாரங்களை கலாய்த்துள்ளனர்.

பா ரஞ்சில் உள்ளிட்டவர்களிடம் அதை கேள்வியாக கேட்டு அதற்கு பதில் அளிக்க வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் நீங்க ஆண்டி இந்தியனா என கேட்கும் போது பா ரஞ்சித் ஆமா இவங்க சொல்றபடி பாத்தா நான் ஆண்டி இந்தியன் தான் என துணிச்சலாக பாஜகவிற்கு எதிராக பதில் அளிக்கின்றார்.

15 லட்சம் உங்க அக்கோண்டுக்கு வந்தா என்ன பன்னுவீங்க என கேட்க அது வரவே வராது இன்னுமா வரும் ன்னு நினைக்கறீங்க என பதில் சொல்ல நீங்க ரொம்ப போல்டா பதில் சொல்றீங்க என ரேடியோ ஜாக்கி பதில் அளித்தவரை பாராட்டுகின்றார்.

வில்லன் பவர் புல்லா காமடியன் பவர் புல்லா என கேட்டு எஸ் வி சேகர் விவாகரத்தையும் கேள்வியின் வாயிலாக விமர்சித்துள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here