Home Tamil Nadu 6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ

6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ

SHARE


சென்னை பலவந்தாங்கலில் பட்டப்பகலில் சாலையில் நடந்த சென்ற மூதாட்டியிடம் வாலிபன் ஒருவன் இரக்கமே இன்றி மூதாட்டியை தள்ளி விட்டு கழுத்தில் இருந்து செயினை அறுத்துக் கொண்டு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் எஸ்பிஐ கலானி பகுதியில் ஜெயலட்சுமி என்ற 67 வயது மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை ஒரு வாலிபன் பின் தொடர்ந்து சத்தமே இல்லாமல் வருகி்ன்றான். திடீர் என பாட்டியின் அருகில் வந்த அந்த வாலின் பாட்டியின் கழுத்தில் இருந்த செயினை முரட்டு தனமாக இரக்கமின்றி இழுக்கின்றார். பின்னர் பாட்டியை தள்ளிவிட்டு அவரது கழுத்தில் இருந்து செயினை அறுக்கின்றான். அவன் அறுத்ததும் அவனுக்காக காத்திருந்த பைக் வருகின்றது. பைக்கில் அவன் தப்பி சென்று விடுகின்றார்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பாட்டியிடம் ஏற்கனவே பறிக்க முயன்ற இவர்கள் அதில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து 2 வது முறையாக வேறு நபர்கள் மூலம் செயினை பறித்து சென்றுள்ளனர்.

சாலையில் விழுந்த மூதாட்டி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் பலவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலிசார் தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள் என போலிசார் தரப்பில் கூறப்படுகின்றது.

இவர்கள் ஏற்கனவே வழிப்பறி சம்வத்தில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது, சமீபத்தில் கடலூரில் சிறு வயது வாலிபர்களின் சம்பவத்தின் பரரப்பபு முடிவதற்குள் ஒரு பாட்டியிடம் வாலிபன் ஒருவன் இரக்கமின்றி பறித்து செல்லும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”திருடுனா என்ன செய்ய போறாங்க 2, 3 மாசம் அப்புறம் ஜாமின்ல வந்துடுலாம், இவங்க நாளா நம்மல வேற என்ன செய்ய முடியும் என்ற மமதையிலும் துணிச்சலிலும் குற்றாவளிகள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. அதனால் தான் திருடன் 2 வது முறையாக கைது 3 வது முறையாக கைது என செய்திகள் வெளியாவதை காண முடிகின்றது” என கோபத்துடன் கூறுகின்றனர் பாதிக்கப்படும் பொதுமக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here