Home Tamil Nadu வெளியே வந்த நிர்மலா தேவியிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள் , வைரலாகும் வீடியோ

வெளியே வந்த நிர்மலா தேவியிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள் , வைரலாகும் வீடியோ

SHARE

6 மாதத்திற்கு மேல் கடந்தும் நிர்மலா தேவி விவகாரத்தில் பொதுமக்களுக்கு விடை கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிர்மலா தேவி மற்றும் முருகனின் வாக்கு மூலம் என அவர்கள் கையெழுத்திட்ட பேப்பர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

அது உண்மையா பொய்யான என்ற விவாதங்களும் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்ட முருகன் என்பவர் 2 தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும் போது என் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையல்ல அதோராத்டோ நான் வந்து உங்களுக்கு சந்திக்கின்றேன் என ஊடகங்களை பார்த்து கூறினார். ஆனால் நீதிமன்றத்தை விட்ட வெளியே வரும் போது நான் கோர்ட்டில் பார்த்துக் கொள்கின்றேன் என்பதோடு முடித்துக் கொண்டு கிழம்பினார். சார் உள்ள போகும் போது அவேசமாக பேசுனீங்க இப்ப ஏன் சார் ஒன்னும் சொல்லமாட்றீங்கன செய்தியார்கள் கேட்க நான் கோர்டில் பார்த்துக் கொள்கின்றேன் எனக் கூறி சென்றார்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மற்றும் முருகன் ஆஜர் ஆகினர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் நேரடியாக கேள்வி கேட்டனர்.

ஏம்மா இப்படி ஓடி ஒழியிறீ்ங்க ? ஏம்மா எதுவுமே பேச மாட்றீங்க நீங்க கொடுத்த வாக்கு மூலம் உண்மை இல்லன்னு சொல்றாங்களே கவர்னர பத்தி சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தம் என பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்க.. காதில் எதுவுமே விழாதது போன்று அவரை போலிசார் அழைத்து சென்றனர். நிர்மலாதேவியும் எந்த கேள்விக்கும் வாய்திறக்கவில்லை.

இதே நிலை தான் முருகனுக்கும். இருவருக்கும் பதில் சொல்ல விரும்பம் இல்லையா ? அல்லது மீடியா முன்பு எதுவும் பேசக் கூடாது என அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்ததா என்பது அவர்களுக்கு தான் தெரியும்.

நிர்மலா தேவி விவகாரத்தில் பொதுமக்களுக்கு விடை கிடைக்காமலே சென்று கொண்டிருக்கின்றது. மற்ற கல்லூரிகளிலும் இது போன்று மாணவிகள் இறையாக்கப்படுகின்றார்களா அது குறித்து விசாரனை, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா இந்த ஒரு வழக்கே இத்தன மாசம் இழுக்கின்றதே என்பன போன்ற கேள்விகள் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றது.

பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்ட காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
courtesy nakkeeran:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here