Home Technology அறிமுகமாகியுள்ள சாம்சங்க கேலக்சி எஸ்9 பிரம்மிப்பூட்டும் புதிய வசதிகள் செயல் விளக்க வீடியோ

அறிமுகமாகியுள்ள சாம்சங்க கேலக்சி எஸ்9 பிரம்மிப்பூட்டும் புதிய வசதிகள் செயல் விளக்க வீடியோ

SHARE

சாம்சங்க கேலக்சி போன் பயன்பாட்டாளர்களால் பெருதும் எதிர்பாக்கப்பட்ட சாம்சங்க கேலக்சியின் புதிய வெர்சன் Galaxy S9 நேற்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஐபோன் 8 வெளியானது. அதன் போட்டியை சமாளிக்க சாம்சங் தனது அடுத்த வெர்சன் போனை தற்போது வெளியிட்டுள்ளது.

கேமரா மற்றும் சோசியல் மீடியா பயன்பாடுகளை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப பிரம்மிப்பூட்டும் புதிய வசதிகளை Galaxy S9 ல் Samsung இடம் பெறச் செய்துள்ளது.

Galaxy S9 மற்றும் Galaxy S9 Plus என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ப்ளு , பர்பல் , ப்ளாக் , க்ரே (lilac purple, coral blue, midnight black, titanium gray) ஆகிய நான்கு நிறங்களில் Samsung Galaxy S9 கிடைக்கிறது.

Galaxy S9 போன் 5.8-inch screen அளவு கொண்டது, 3,000 mAh பேட்டரி கொண்டது

Galaxy S9 Plus போன் 6.2-inch screen அளவு கொண்டது, 3,500 mAh பேட்டரி கொண்டது.

மேலும் Galaxy S9 Plus ன் பின் புற கேமராவில் 2 லென்ஸ்கள் இடம் பெற்றுள்ளது.

ஏஆர் இமோஜி

பிரம்மிப்பூட்டும் புதிய வசதியாக AR Emoji (artificial intelligence) என்ற ஒன்றை சாம்சங்க இந்த போனில் அறிமுகம் செய்துள்ளது.

நமது உருவத்தை ஸ்கேன் செய்து நமது உருவத்தை போன்றே செயற்கையாக ஒரு உருவத்தை உருவாக்கி நாம் அனுப்பும் Emoji களை நமது எண்ணங்களுக்கு ஏற்ப நமது உருவத்திலேயே அனுப்ப இதன் மூலம முடியும்.

மேலும் Live Ar emoji வசதியும் உள்ளது. அதாவது கேமரா மூலம் நமது முக அசைவுகளை நுட்பமாக கவனித்து அச்சு அசலாக அப்படியே செல்போன் திரையில் நமது தோற்றத்தில் உள்ள உருவம் அதை பிரதிபளிக்கும். பொதுவாக அனிமேஷன் படங்களை எப்படி எடுத்தோம் என காட்டும் போது முகத்தில் நிறைய வயர்களை மாட்டிக் கொண்டு அவரது முக பாவனை அப்படியோ ஸ்கிரீனில் தெரியும். அதே போன்ற வசதியை செல்போனில் கொண்டு வந்துள்ளது சாம்சங்க.

அட்டோமேடிக் ஸ்லோ மோஷன் ஷார்ட்ஸ்

நாம் எடுக்கும் ஒரு வீடியோவை தானாகவே பல்வேறு ஷார்ட்களில் உருவாக்கி நமக்கு வழங்குகிறது.

ரியல் டைம் ட்ரான்ஸ்லேசன்

ரியல் டைம் மொழியாக்கம் வசதியையும் வழங்குகிறது. மொழி புரியாத இடத்திற்கு சென்றால் அங்கு உள்ள மொழிகளில் எழுதப்பட்டுள்ள அறிவிப்புகளை மேகராவில் மூலம் பார்த்தால் அங்கு எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் அப்படியோ ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்கின்றது. இதற்கென நாம் எதுவும செய்ய தேவையில்லை கேமராவை அந்த அறிவிப்பில் கொண்டு வைத்தால் போதும்.


விலை

மார்ச் 3 ஆம் தேதி முதல் போனை முன் பதிவு செய்து கொள்ளலாம். Galaxy S9 போன் 720 அமெரிக்க டாலர் (சுமார் 46 ஆயிரம் ரூபாய்) Galaxy S9 pluse போன் 870 அமெரிக்க டாலர் (சுமார் 56 ஆயிரம் ரூபாய்) விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் எஸ் 9 , ஐபோன் 8 , கூகுள் பிக்சல் 2 விற்கும் உள்ள வித்தியாசங்கள்


ஏஆர் இமோஜி வசதி செய்முறை விளக்கம் வீடியோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here