Home Tamil Nadu விடுதலையான நக்கீரன் கோபால் கலாய் பேட்டி – வீடியோ

விடுதலையான நக்கீரன் கோபால் கலாய் பேட்டி – வீடியோ

SHARE

”கவர்னரை நான் தாக்கியதாகவும் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் என் மீது வழக்கு போட்டுள்ளார்கள் என்பது நீதிபதி விசாரிக்கும் போது தான் எனக்கு தெரிந்தது” என நக்கீரன் கோபால் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

”நேற்று வரைக்கும் தெருவுல கூட்டிகிட்டு தான் இருக்கின்றார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிக் கொண்டு தான் இருக்கின்றார் நான் எப்பொது அவரை பணி செய்ய விடமாமல் தடுத்தேன்? என நீதிபதி கேட்கும் போது என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்” என நக்கீரன் அவருக்குரிய பாணியில் அதில் பேசியுள்ளார்.

”விமான நிலையத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் அங்கு ரெஸ்ட் ரூம் சென்ற என்னை கைது செய்தனர். என்னுடன் 2 பேர் வந்துள்ளார்கள் அவர்களிடம் தகவல் சொல்லி விட்டு வருகின்றேன் அவர்களுக்கு புனேவில் யாரையும் தெரியாது நான் அவர்களை அழைத்து செல்ல வேண்டும் எனக் கூறியும் அவர்கள் அனுமதிக்கவில்லை மாறாக எனது செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டார்கள்” என நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.

எக்மோர் 13 வது நீதிபதி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். நீதி வென்றுள்ளது நினைத்தால் தங்களுக்கு எதிரான யாரைம் உள்ளே தள்ளி விடலாம் என்ற ஒரு நிலையை நீதிபதியின் தீர்ப்பு மாற்றியுள்ளது அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் எப்பொழுது போல் நக்கீரன் தனது பணியை செய்யும் என நக்கீரன் கூறியுள்ளார்.

தி ஹிந்து ராம் அவர்களுடன் நக்கீரன் கோபால்

நீதிமன்றத்தில் புத வித நிகழ்வாக தி ஹிந்து ராம் அவர்களை நீதிபதி பேசி அனுமதித்தார் ஊடக பிரிவு பிரதிநிதியாக அவரது கருத்தையும் நீதிபதி கேட்டது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here