Home India எம்பி மகனின் லீலைகள் 5 நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டு பெண்களுடன் எம்பி மகன்

எம்பி மகனின் லீலைகள் 5 நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டு பெண்களுடன் எம்பி மகன்

SHARE

சினிமாவில் அரசியல்வாதியின் மகன் என்றால் ஹோட்டல் ரூம் குடித்து கும்மாலம் அடிக்க உடன் பலான பெண்கள் விலை உயர்ந்த கார் என காண்பிப்பார்கள். சிலர் இப்படில்லாமா இருக்கும் என்றும் கூட நினைப்பார்கள். பலர் அதை நிஜகத்தில் நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற்றிருக்க மாட்டார்கள். அந்த வாய்ப்பை எல்லோருக்கும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் முன்னால் எம்பி யின் மகன் ஆசிஷ் பாண்டே!

5 நட்சத்திர ஹோட்டல் வாசலில் BMW காரில் பலான வெளிநாட்டு பெண்களுடன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு முன்னால் எம்பி மகன் மற்றுமொரு சொகுசு ஜோடியை மிரட்டும் வீடியோ காட்சி தான் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

போதையில் இருப்பவனுக்கு சிரிய கல்லை தாண்டுவதே பெரிய பாலத் தாண்டுவது மாறி என்பது போன்று ரெஸ்ட் ரூமில் ஏற்பட்ட சின்ன பிரச்சனைக்கு முன்னால் எம்பி மகன் தான் வைத்திருந்த துப்பாக்கியை தூக்கி காட்டியுள்ளார்.

பிரச்சனை என்ன

டெல்லியில் உள்ள Hyatt Regency 5 நட்சத்திர ஹோட்டலுக்கு ஒரு சொகுசு ஜோடி வந்துள்ளனர். அந்த பெண்ணிற்கு ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டியிருந்துள்ளது. உடன் வந்த நபர் ”பெண்கள்” ரெஸ்ட் ரூமிற்கு தன்னுடன் வந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். உள்ளே விட்டு விட்டு வெளியே நின்றுள்ளார்.

இந்த முன்னால் எம்பியின் மகன் தன்னுடன் 3 பெண்களை அழைத்து வந்துள்ளார் அந்த பெண்களின் பேச்சை பார்த்தால் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் போன்று தெரிகின்றது. இந்த 3 பெண்களும் அதே நேரத்தில் ரெஸ்ட் ரூமிற்கு செல்ல ஆண் வெளியே நிற்பதை பார்த்து இந்த பெண்கள் அவரை கேலி கிண்டல் செய்து அதில் பிரச்சனை வந்ததாக கூறப்படுகின்றது.

எம்பி மகன் மற்றும் 3 பெண்கள் 5 நட்சத்திர ஹோட்டல் வாசலில் BMW சொகுசு காரில் காத்திருக்க அந்த ஜோடி வெளியே வரும் நேரத்தில் எம்பி மகன் அவர்களிடம் போய் பிரச்சனை செய்துள்ளார். வாக்கு வாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் தன்னிடமிருந்து துப்பாக்கியை எடுத்து உன்னைய கொன்றுவேன் என மிரட்டியுள்ளார்.

இதை எம்பி மகன் காரில் உள்ளே அமர்ந்திருந்த அந்த வெளிநாட்டு பெண்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர். அந்த காணொளி தான் தற்போது சமூக வலைதளத்தில் வரவி வருகின்றது.

எம்பியுடன் வந்த பெண்களும் அறைகுறை ஆடையுடன் காதில் கேட்க முடியாத மிகவும் ஆபசமான வார்த்தைகளை பேசி அந்த ஜோடியை திட்டுகின்றனர்.

ஒரு கட்டத்தில் காருக்குள் எம்பி மகன் வருகின்றார். பின்னர் மீண்டும் அந்த பெண்கள் அந்த ஜோடியை கெட்ட வார்ததையில் திட்ட எம்பி மகன் மீண்டும் ஒரு முறை வெளியே வந்து திட்டி விட்டு மீண்டும் சொகுசு காரிக்குள் பெண்களுடன் கிழம்பி செல்கின்றார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. ஒரு பக்கம் அடுத்த வேல சொத்துக்கு வழியில்லாம் திண்டாடும் மக்கள் மறு மக்கம் சேவை செய்கின்றேன் என்ற பெயரில் வந்து 5 நட்சத்திர ஹோட்டலில் பெண்களுடன் கூத்து கும்மாலம், போதாதற்கு தான் அழைத்து வந்த பெண்களுக்காக துப்பாக்கி தூக்கி மிரட்டும் அவலம் என சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

பிஎஸ்பி கட்சியை சேர்ந்த முன்னால் எம்பியின் மகனை தற்போது போலிசார் தேடி வருகின்றனர். அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.

பாக்க டீசன்ட்டு மாறி காட்டுக் கொண்டு வாயில் வருவது கூவம் ஆற்றை விட கேவலமாக உள்ளதே என இந்த பெண்களின் பேச்சை கேட்பவர்கள் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிந்து வருகின்றனர்.

வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்க முடியாத அளவிற்கு ஆங்கில கெட்ட வார்த்தைகளை அந்த பெண்கள் பேசுவது காணொளியில் பதிவாகியுள்ளது. அவங்க நாட்ல இந்த மாறி பேசுறது சாதாரணம் போலருக்கு..


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here