Home World குழந்தையின் தொண்டையில் சிக்கிய பொருள் சரியான நேரத்தில் காப்பாற்றிய அதிகாரி

குழந்தையின் தொண்டையில் சிக்கிய பொருள் சரியான நேரத்தில் காப்பாற்றிய அதிகாரி

SHARE

உணவகத்தில் 14 மாத குழந்தைக்கு தொண்டையில் சிக்கன் துண்டு சிக்கி உடல் நீள நிறமாகி மூச்சு விடத் திணறிய குழந்தையை அங்கு பணியில் இருந்து பாதுகாப்பு அதிகாரி நிதனமாக செயல்பட்டு குழந்தையின் தொண்டியில் சிக்கியதை வெளியே எடுத்து குழந்தையை காப்பாற்றிய காணொளி தற்போது சமூக வலைளதத்தில் பரவி வருகின்றது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த ராபர்ட் என்ற அதிகாரிக்கு சமூக வலைதளத்தில் மில்லியன் கணக்கில் பாராட்டுக்கள் குவிகின்றது.

ப்ளோரிடாவில் உள்ள PALM BEACH GARDENS பகுதியில் உள்ள உணவகத்திற்கு தனது இரண்டு குழந்தைகளுடன் சென்றுள்ளார் தாய். ஒரு குழந்தைக்கு உணவு ஊட்டிவிட்டுக் கொண்டிருக்கு 14 மாத குழந்தையை அருகில் அமர வைத்துள்ளார். 14 மாத குழந்தை திடீர் என ஒரு சிக்கனை துண்டை எடுத்து விழுங்கியுள்ளது.

அப்போது தாய் அதை சரியாக கவனிக்கவில்லை. குழந்தை திடீர் என நிலை தடுமாறி மூச்சு விட சிரமப்பட்டதும் குழந்தையின் தொண்டையில் சிக்கன் மாட்டிக் கொண்டுள்ளது என்பதை தாய் அறிந்து பதறிப் போய் என்ன செய்வது எனத் தெரியாமல் குழந்தையின் அங்கும் இங்கும் அலைகின்றார்.

குழந்தை நீல நிறமாக மாறத் துவங்கியதால் தாய் மேலும் பதட்டம் அடைந்து சத்தம் போடுகின்றார். ஒரு சிலர் அருகே வந்து குழந்தையை காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.

குழந்தை தொடர்ச்சியாக மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தது. தாய் பதட்டத்தின் உச்சிக்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்து ராபர்ட் என்ற அதிகாரி குழந்தையை காப்பாற்ற வருகின்றார்.

5 நிமிடம் அவர் குழந்தையை தலைகீழாக சாய்த்து முதுகில் தட்டுகின்றார். இருப்பினும் பலன் இல்லை. தாய் கதறுகின்றார். இருப்பினும் அதிகாரி நிதானம் தவறாமல் முயற்சியை கை விடாமல் தொடர்ச்சியாக குழந்தையை தலைகீழாக சாய்த்து முதுகில் தட்டுகின்றார். ஒரு கட்டத்தில் குழந்தையின் தொண்டையில் இருந்து சிக்கன் துண்டு வெளியே வந்தது.

குழந்தையுடன் தாய் உடன் காப்பாற்றிய அதிகாரி

உடனடியாக குழந்தை மீட்கப்பட்ட மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டது.

உணவகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து ராபர்ட் என்ற அதிகாரி அப்பொழுது தான் முதலுதவி செய்யும் பயிற்சி எடுத்து வந்துள்ளார் குறிப்பாக குழந்தைகளின் தொண்டையில் ஏதாவது சிக்கி விட்டால் அதை எவ்வாறு எடுப்பது என்ற பயிற்சியை எடுத்து வந்துள்ளார்.

சரியான நேரத்தில் சரியான இடத்தில் நான் அங்கே சென்றேன் எனது பயிற்சி குழந்தையை காப்பாற் உதவியது அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுவரை 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்

அந்த குழந்தையின் தாய் அதிகாரிக்கு நன்றி தெரிவித்தார். குழந்தையை காப்பாற்றிய அதிகாரியை உயர் அதிகாரிகள் விருது வழங்கி பாராட்டியுள்ளனர்.

குழந்தையை அதிகாரி காப்பாற்றியது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

நமக்கும் இந்த காணொளி உதவலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here