Home India அதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல்...

அதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்

SHARE

தாய் கண்டித்ததற்காக அவரை 19 வயது மகன் தாக்கிய சம்பவத்தின் பரபரப்பு முடியவதற்குள் அதே போன்று மற்றுமொரு சம்பவம் அதே பெங்களுரில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட தாயின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. பெங்களுர் சதாசிவம் நகர் பகுியில் வசிப்பவர் பாரதி. இவரது மன் உத்தம் குமார் வயது 20, சம்பவத்தன்று குடித்து விட்டு இரவு தாமதமாக வந்துள்ளான்.

தாய் பாரதியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளான். ”ஒருவரிடம் பணம் கடன் வாங்கியுள்ளேன் அவர் திருப்பி கேட்கின்றார் பணம் தா” என தாயிடம் கேட்டுள்ளான். குடிப்பதற்கு மகன் பணம் கேட்பதை உணர்ந்த தாய் பணம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திடீர் என உத்தம் குமார் வெளியே சென்று பெட்ரோலை வாங்கி வந்து தாயின் மீது ஊற்றியுள்ளான். தாய் பதறிப் போய் என்னடா பன்ற எனக் கேட்டுக் கொண்டிருக்க தாய் என்றும் பாராமல் அவர் மீது தீயை கொளுத்து போட்டுள்ளான் மகன் உத்தம் குமார்.

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு உத்தம் குமாரின் தந்தை ஓடி வர, உத்தம் குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். கணவர் உடனயாக மனைவியின் முகம் மற்றும் உடலில் பரவிய தீயை அனைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். தாய் பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மகன் உத்தம் குமார்

முகம் மற்றும் உடலில் தீ காயங்களுடன் தாய் பாரதி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். தீ காயங்களுடன் மருத்துமனையிலிருந்து தனது மகனால் தனக்கு நேர்ந்ததை தாய் கூறும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

மகன் மீது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அவன் மீது போலிசார் 307 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள உத்தம் குமாரை பெங்களுர் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உடம்பில் துசி பட்டால் கூட பொறுத்தக் கொள்ள முடியாத தாய் மீது தீயை வைத்து கொளுத்திய மகனுக்கு சமூக வலைதளத்தில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றது. குடி பழக்கம் சிறுவர்களையும் எந்த அளவிற்கு சீர்கெடுத்துள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here