Home Tamil Nadu சென்னை வேளச்சேரியில் பரபரப்பு வைரலாகும் வீடியோ பெண்ணை போல் வேடமிட்டு பர்தாவில் திரிந்த வாலிபர்

சென்னை வேளச்சேரியில் பரபரப்பு வைரலாகும் வீடியோ பெண்ணை போல் வேடமிட்டு பர்தாவில் திரிந்த வாலிபர்

SHARE


சென்னை வேளச்சேரியில் பெண்களை போன்று வேடிமிட்டு பர்தா அணிந்து பெண்கள் நடமாடும் இடங்களில் பெண்களுடன் நெருக்கமாக திரிந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலிசாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி பகுதியில் 3 நாட்களாக இந்த வாலிபர் பெண் வேடமிட்டு புர்கா அணிந்து திரிவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். பெண்கள கூடும் இடங்களில் பெண்களை போன்று பாவனை செய்து கொண்டு முகம் தெரியாத வாறு பர்தாவை அ

ணிந்து கொண்டு சந்தேகப்படும் படி திரிந்து வந்துள்ளார் இந்த வாலிபர். அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் வர அவரது முகத்தை திறந்த பார்த்த போது அது பெண் அல்ல ஆண் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அவர் வைத்திருந்த பையை பரிசொதனை செய்த போது அதில் துப்பாக்கி (நிஜமானது அல்ல) உள்ளிட்ட பொருட்களை கண்டு பொதுமக்களுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது அவரின் மீது சந்தேகம் அதிகரித்தது. அவனிடம் விசாரித்ததற்கு நான் பிராங்க் பன்ன வந்தேன் என்னைய நானே வீடியோ எடுத்துக்குவேன் அதுக்கு தான் இந்த மாறி திரிந்தேன் எனக் கூறியுள்ளார். பிராங்க் பன்றவனுக்கு எதுக்கு பொம்பை துப்பாக்கி என பொதுமக்கள் கேட்க அவரிடம் அதற்கு சரியான பதில் இல்லை.

உடனே அங்கிருந்தவர்கள் வேளச்சேரி போலிசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போலிசார். அவனிடமிருந்த பொம்மை துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றர்.

முதற்கட்டமாக அவரின் பெயர் சங்கர் என்பதும் அவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதும் சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாகவும் தெரியவந்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here