Home India பாஜக எம்எல்ஏ அலுவலகம் முன்பு பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு! வீடியோ

பாஜக எம்எல்ஏ அலுவலகம் முன்பு பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு! வீடியோ

SHARE


கர்நாடக மாநிலம் மைசூரில் பாஜக எம்எல்ஏ ராமாதாஸ் என்பவரின் அலுவலகம் முன்பு ப்ரேம் குமாரி என்ற பெண் தனது ஷால் மூலம் தற்கொலை செய்து கொள்ள முயன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு மைசூர் தொகுதியில் வெற்றி பெற்றவர் ராமதாஸ், இவர் முன்னால் அமைச்சரும் ஆவார். ராமதாஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளவதாக காதலித்து ஏமாற்றி விட்டார் என்பது தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் புகாராகும்.

பாஜக எம்எல்ஏ அலுவலகம் முன்பு பெண் தற்கொலைக்கு முயல்வதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தனர். நீண்ட நேரம் அவலுகத்தின் முன்பாகவே ரோட்டில் படுத்து கிடந்த ப்ரேம் குமாரியை போலிசார் வந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் அந்த பெண்ணிற்கு எதிராக பாஜக எம்எல்ஏ ராமதாஸின் ஆதரவாளர்கள் அளித்த புகாரில் அந்த பெண்ணை கைது செய்து அழைத்து சென்றனர்.

தனக்கும் அந்த பெண்ணிற்கும் எந்த சம்பந்ததும் இல்லை என பாஜக எம்எல்ஏ ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணும் அவரும் பேசுவது போன்ற ஆடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் நாமினேசன் தாக்கல் செய்வது தொடர்பாக ப்ரேம் குமாரியிடம் அவர் பேசுவது போன்று அந்த உரையாடல் அமைந்துள்ளது.

ஒரு பெண், எம்எல்ஏ அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here