Home Tamil Nadu துணை போன வக்கீலை நடுரோட்டில் அடித்து உதைத்த பெண்கள் – வீடியோ

துணை போன வக்கீலை நடுரோட்டில் அடித்து உதைத்த பெண்கள் – வீடியோ

SHARE

ஜார்கண்ட் மாநிலம் போகாரா என்ற பகுதியில் தனது வீட்டை அபகரித்துக் கொண்ட வாடகை தாரரையும் அவருக்கு உதயியாக இருந்த வக்கீலையும் பெண் அமைப்பை சேர்ந்தவர்கள் நடுரோட்டில் அடித்து உதைத்து நியாம் கேட்டுள்ளனர்.

தேவி என்ற பெண் தனக்கு சொந்தமான வீட்டை குமார் என்பவருக்கு வாடைக்கு விட்டு விட்டு கனடா நாட்டுக்கு தனது மகனுடன் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்க்கும் போது குமார் வீட்டை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த வேலைகளுக்கு குமாருக்கு உதவியாக கிரி என்ற வக்கீல் இருந்துள்ளார்.

தேவி பல இடங்களில் இது குறித்து புகார் அளித்தும் பலன் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இதை தொடர்ந்து பெண்கள் அமைப்பிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் முறையாக கேட்டு பார்த்து கிடைக்காததால் குமாரையும் அவருக்கு உதவியாக இருந்த வக்கீலையும் நடு ரோட்டில் வைத்து தாக்கியுள்ளனர்.

இதை கேள்விபட்ட போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து வக்கீல் கிரியை பெண்களிடமிருந்து காப்பாற்றினர். வாடகை தாரர் வீட்டு உரிமையாளருக்கு 5 லடசம் கொடுத்தாகவும் கூறப்படுகின்றது.

பின்னர் இரு தரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here