Home Tamil Nadu துடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்

துடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்

SHARE


கோவையில் துடியலூர் சிறுமியை நாசம் செய்த கொலை செய்த குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு பொதுமக்கள் இன்று தர்ம அடி கொடுத்துள்ளனர்.

சந்தோஷ்குமாருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அவனை போலிசார் ரகசியமாக அழைத்து சென்றனர். சந்தோஷ்குமார் மருத்துவமனைக்கு வருவது தெரிந்து விட்டால் பொதுமக்கள் ஒன்று கூடிவிடுவார்கள் என்பதற்காக அவனை போலிசார் ரகசியமாக ஆண்மை பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.

பரிசோதனை முடித்த பின்னர் அவனது முகத்தை மூடி போலிசார் அவனை வெளியே அழைத்து வந்தனர். அப்பகுதியில் இருந்த சிலருக்கு இவன் தான் சிறுமியை நாசம் செய்தவன் என்பது தெரியவந்ததை தொடர்ந்து வெளியே வந்த அவனை நைய புடைத்தனர்.

”பச்ச குழந்தைய நாசம் பன்ன உனக்கு பாதுகாப்பாட, பச்ச குழந்தைய நாசம் பன்னுவியாடா பன்னுவியாடா” எனக் கேட்டு பொதுமக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

”இவனுக்கெல்லாம் எதுக்கு சார் பாதுகாப்பு தூக்குல போடுங்க சார்’ என ஆவேசப்பட்ட பொதுமக்கள் அவனை பாதுகாத்து அழைத்து சென்ற போலிசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

யாருக்கும் தெரியாமல் முகத்தை மறைத்து அழைத்து சென்றதும் பொதுமக்கள் அவனை அடையாளம் கண்டு தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லையே என அப்பகுதியில் மற்ற சிலர் ஆதங்கப்பட்டனர். பொதுமக்களிடமிருந்து அவனை மீட்டு போலிசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here